பக்கம்:காலமும் கவிஞர்களும்.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 24 காலமும் கவிஞர்களும் உயர்தர நீதிமன்றத் தலைவராக இருந்த பெரி என்ற பெரியார் இமயம் முதல் குமரிவரை வழங்கும் மொழிகளே யெல்லாம் ஆராய்ந்து தாம் கண்ட உண்மைகளைக் கட்டுரை வாயிலாக வெளிப்படுத்தினர்; வட நாட்டில் வழங்கும் மொழிகள் ஆரிய இனத்தைச் சேர்ந்தவை என்றும், தென்னுட்டில் வழங்கும் மொழிகள் தமிழ் வகுப்பைச் சேர்ந்தவை என்றும் தமது கொள்கையை வெளியிட்டார். இக்கொள்கை பல மேட்ைடு அறிஞர் களின் கருத்தைக் கவர்ந்தது. இஃதிவ்வாருக, தென்னுட்டில் பல துறைகளிலும் பணியாற்றிய ஐரோப்பிய அறிஞர்கள் தென்னுட்டில் வழங்கிய மொழிகளில் தமது ஆராய்ச்சியைச் செலுத் தினர். டாக்டர் குண்டர்ட் (Dr. Gundert என்பார் கேரள நாட்டில் வழங்கும் மலையாள மொழியைச் கெவ்வனே கற்று வட மொழியில் திராவிடக் கூறுகள் (Dravīdian Elements in Sanskrit) srsörp obj rijă stá கட்டுரையை கி. பி. 1869-ஆம் ஆண்டில் செருமானி யக் கீழ் நாட்டுக் கலைக் கழகத்தின் இதழில் (The Journal of the German Oriental-Society) @5,15ifu?...Lirif. பின்னர் டாக்டர் கிட்டல் (Dr. Kittel) என்ற அறிஞர் கருநாடக நாட்டில் வழங்கும் கன்னட மொழியை முட்டறுத்துணர்ந்து கி. பி. 1872-ஆம் ஆண்டில் *வட மொழி அகராதிகளில் திராவிடச் சொற்கள்” என்ற கட்டுரையை வெளியிட்டார். தாம் எழுதிய கன்னட அகராதியிலும் வடமொழி கடன் வாங்கின சொற்கள் என 420 சொற்களே வகைப்படுத்திக் காட்டினர். ஆந்திர நாட்டில் அலுவல் பார்த்த சி. பி. பிரெளன் என்ற அறிஞர் தெலுங்கு மொழியினைத் துருவி ஆராய்ந்து, தமது கருத்துக்களைக் கட்டுரைகளாக வெளிப்படுத்தினர். நீலகிரியில் வாழும் தோடர் மொழிச்