பக்கம்:காலமும் கவிஞர்களும்.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திராவிட மொழிநூலின் வரலாறு 1 25 SSAS SSAS SSAS SSAS SSiAi A SAS SSAS SSAS SSAS SSASAS SSAS SSAS SSAS SSAS SSAS சொற்களைப் போப்பையர் திரட்டி வெளியிட்டார். இந்த நிலையில்தான் கால்டுவெல் தென்னுட்டிற்கு வந்து தமிழ் மொழியிலுள்ள நூல்களே முறையாகக் கற்ருர். மொழியாராச்சியில் முன்னணியில் நின்ற செருமானிய அறிஞர் எழுதியுள்ள நூல்களே யெல்லாம் அறிவதற்காக செருமானிய மொழியையும் கற்ருர். ஏற்கெனவே அறிஞர்கள் வெளியிட்டிருந்த கருத்துக்களேயும் தாம் பெற்ற தமிழ் அறிவையும் கொண்டு தமது நுண்ணறி வால் திராவிட மொழிநூல் ஒன்று வரைவதற்கான திட்டம் இவர் உள்ளத்தே உருக்கொள்ளலாயிற்று. பழந்தமிழ்ச் சொற்களைப் பழங்கன்னடச் (ஹள கன்னடம்) சொற்களோடும் ஆதித் தெலுங்குச் சொற். களோடும் கால்டுவெல் ஒப்பிட்டுநோக்கியபொழுது நூற். றுக்கணக்கான இயற்சொற்களின் வேர்கள் (roots) மும் மொழிகளிலும் ஒன்று பட்டிருப்பது தெரிந்தது. மேனுட்டு மொழி நூல்களிற் கண்ட தெள்ளிய ஆராய்ச்சி முறை களைத் துணைக்கொண்டு, தென்னிந்திய மொழிகளைத் துருவி ஆராய்ந்தார். இத்துறையில் பதினேந்து ஆண்டு கள் அல்லும் பகலும் ஓயாது உழைத்தார். அவ்வாராய்ச் சியின் பயனகத் திராவிட மொழிகளின் இலக்கணக் கூறுகளும் சொல்லாக்க முறைகளும் அடிப்படையான ஒற்றுமையுடன் விளங்கக் கண்டார். தமது ஆராய்ச்சியில் கண்ட முடிவுகளைத் தொகுத்து கி. பி. 1858-ஆம் ஆண்டில் 'திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்” என்ற அரியதொரு நூலாக வெளியிட்டார். 1875-ஆம் ஆண்டில் இதன் இரண்டாம் பதிப்பைக் கால்டுவெலே திருத்தம் செய்து வெளியிட்டார். முதற் பதிப்புக்குப் பிறகு தாம் கண்ட உண்மைகளைச் சேர்த்தும் முதற்பதிப் பில் ஆராய்ச்சிக் குறைவால் ஏற்பட்ட சில தவருன முடிவுகளைத் திருத்தம் செய்தும், இரண்டாம் பதிப்பு