பக்கம்:காலமும் கவிஞர்களும்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 காலமும் கவிஞர்களும் SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS AAAAAASAAAAASA SSASAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAAAASAASAASAASAAAS --~~ءی<-مح*.. --- ت -- ہین۔ہم ہیں۔ہر பூக்களுக்குக் குறைவு உண்டா? பூக்கள் கம்மென மணத்தைப் பரப்பி நிற்கின்றன. நிறத்தாலும் மணத்தா லும் கவரப்பெற்ற வண்டுகள் தம் உணவாகிய தேனேக் கொண்டுள்ள அம்மலர்களை நாடி இனிய பண் ணுேசையை உண்டாக்குகின்றன. மரங்களின்மேலுள்ள மந்திகள் மருண்டு மருண்டு பார்க்கின்றன. மயில் ஒன்று தோகையை விரித்துக்கொண்டு ஆடுகின்றது. அடிக்கடி மேகங்கள் திரளும்பொழுது மயிலின் ஆட்டம் நடை பெறுகின்றது. இக்காட்சிகளேயெல்லாம் காண்கின்ருர் கபிலர். அவர் சிந்தனை வேலை செய்யத் தொடங்குகின்றது. தனது மனக்கண்முன் வேறு ஒரு காட்சியைக் காண் கின்ருர். அது என்ன ? கழைக்கூத்தன் ஆடும் கூத்து ஒன்று அவர் மனக்கண்முன் வந்து நிற்கின்றது. கழைக் கூத்தனின் மனைவி வளைந்த மூங்கிலின்மீது நின்ருடு வதும், கழைக்கூத்தன் மத்தளம் முழக்குவதும், அவர் களது மக்கள் அருகே நின்றுகொண்டு குழலேயும் யானைத் துதிக்கைபோன்ற வங்கியம் என்ற ஒருவகை வாத்தியத்தையும் ஊதுவதும், வேடிக்கைப் பார்க்கும் மக்கள் அந்தக் கூத்தினைப் பார்த்துக்கொண்டு நிற்றலும் அவர் மனக்கண்முன் தோன்றுகின்றன. தன் மனக்கண்முன் தோன்றிய காட்சியைத் தான் நேரில் கண்ட காட்சிகளுடன் ஒற்றுமைப் படுத்துகின் ருர் கவிஞர். கழைக்கூத்தன் மனேவியை யொப்ப மயில் நடனம் ஆடுகின்றது. நடனத்திற்கேற்ற பக்கவாத்தி யங்கள் இயற்கையிலேயே அமைந்து கிடக்கின்றன. வண்டுகளால் துளேக்கப்பட்ட மூங்கிலின் துளைகளில் கோடைக்காற்று புகுந்து வெளிப்படும்பொழுது புல் லாங்குழல் வாசிப்பதுபோல் இருக்கின்றது. அருவி நீர் மேட்டிலிருந்து பள்ளங்களில் விழுந்து விழுந்து ஓடும் பொழுது மத்தளம் கொட்டுவதுபோன்ற ஒலி கேட்கின்