பக்கம்:காலமும் கவிஞர்களும்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவள்ளுவர் கண்ட நாடு 67 AAAA SAS A SASMSASMAAA AAAA AAAA AAAA AAAA AAAA AAAA AAAAMAAA AAAA AAAAA கவிஞன் கண்ட நாட்டைப் பற்றிய கருத்துக்கள் பரந்த நோக்கத்துடன் இருத்தலாலும், சாதி வேறுபாடு காரணமாகவும், சமய வேறுபாடு காரணமாகவும், நிற வேறுபாடு காரணமாகவும், தேச வேறுபாடு காரணமாக வும் மாறுபாடு இல்லாது எல்லா நாட்டினர்க்கும் எக் காலத்திற்கும் பொருந்துவனவாக இருப்பதாலும் அவை எவ்வகையான உள்ளச் சார்பும் உள்ளத் தடிப்பும் அற்றவைகளாக இருப்பதாலும், அவை என்றும் போற்றப்படுபவனவாக உள்ளன. இன்று உலகப் பொதுமறை என்று அறிஞர்களால் பாராட்டப்பெறும் திருக்குறளிலே திருவள்ளுவர் "நாடு” என்பதுபற்றி ஒர் அதிகாரத்தை வகுத்துக்கொண்டு அதில் நல்ல நாட்டின் இயல்புகளைக் குறித்துச் சில கருத்துக்களே நமக்குத் தெரிவிக்கின்ருர், நாடு இயற்கை வளம் உடையதாக இருக்கவேண்டும். இயற்கை வுளம் உடைய நாட்டில்தான் மக்கள் வருந்தாமல் பயன். பெற முடியும். மக்கள் நாடிப் பாடு படாமலேயே வளம் தருகின்ற நாடே நாடு என்று போற்றத் தக்கது. தேடித் தேடிச் சென்ருலல்லது வளம் பயக்காத நாட்டை ஒரு நாடு என்று சொல்ல முடியுமா ? யாதொரு முயற்சியு மின்றி எல்லாருக்கும் எல்லாப் பொருள்களும் கிடைக்கத் தக்கவாறு வளமுள்ளதுதான் நாடு என்கின்ருர் வள்ளுவர். "நாடென்ப நாடா வளத்தன ; நாடல்ல நாட வளம்தரும் நாடு: என்பது அவர் திருவாக்கு. கவிஞர்களின் உலகில் சில நாடுகளேக் காண்கின் ருேம். அவை யாவுமே நாடாமல் முயலாமல் பயன் தருவ தாகத் தோன்றவில்லை. ஒரு நாட்டைப்பற்றிக் கூறும் பொழுது அநேகமாக எல்லாக் கவிஞர்களும் ஒரே மாதிரி யாகத்தான் கூறியுள்ளனர் என்று சொல்லவேண்டும். 1. குறள்-839