பக்கம்:காலமும் கவிஞர்களும்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவள்ளுவர் கண்ட நாடு 69 கம்பனேயே கேட்போமே. மழை பெய்வதையும் ஆற்றில் வெள்ளம் வருவதையும் கூறியபின் உழவினைப் பற்றி ஒரு சில வார்த்தைகளைச் சொல்லிவிட்டு நம்மை நேராக நெற் குவியலுக்கே அழைத்துச் சென்று விடுகின்ருன் கவிஞன். கோசல நாட்டில் மெய் வருந்திப் பயிர் விளேத்தற்கு ஒரு குறிப்புக்கூட இல்லை. உழவர்கள் உழுகின்றனர் ; உழுத சாலிலே முத்தும் மணியும் சிதறும் காட்சிகளைக் காண்கின்ருேம். விதைப்பதையும் பிற செயல்களையும் நாம் பார்க்கவில்லை. மெய் வருந்திப் பயிர் செய்யாமல் எல்லாப் பொருள்களையும் உழவர்கள் எளிதில் பெறுகின்றனர் என்பதைக் கம்பன், "கதிர்படு வயலின் உள்ள கடிகமழ் பொழிலின் உள்ள முதிர்பல மரத்தின் உள்ள முதிரைகள் பலவின் உள்ள பதிபடு கொடியின் உள்ள படிவளர் குழியின் உள்ள மதுவன மலரில் கொள்ளும் வண்டென மள்ளர் கொள்வார்’ சி. (கடிமகழ் - வாசனை வீசுகின்ற ; முதிரைகள் - துவரை போன்ற பருப்பு வகைகள் ; பதி-பூமி , மள்ளர்-உழவர்கள்.) என்று காட்டுகின்ருன். நமக்குத் தெரியும், வண்டுகள் ஆராய்ந்து ஆராய்ந்து இனிய தேனேயே கொள்ளும் என்று. அந்தத் தேன் அந்த வண்டுகள் உண்டாக்கியதல்ல. தேனிருக் கும் மலர்களையும், மலர்கள் தோன்றும் செடி கொடி மரங்களையும் வண்டுகள் வளர்த்தனவா ? அதுவும் இல்லை. வண்டுகளின் வாழ்க்கையில் நாம் கவனிக்க வேண்டிய முக்கியமாக ஒரு கூறு உள்ளது. அது এr 55rsঠা ? வண்டு தான் மலர்களில் எடுத்த தேனைத் 2. கம்பரா. நாட்டுப்படலம், செய். 21.