பக்கம்:காலமும் கவிஞர்களும்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

73 காலமும் கவிஞர்களும் பாராது அதிகப் பொறுப்புக்கள் ஏற்படுங்கால் புதிய வரிகள் விதிக்க நேரிட்டால் அவற்றை மக்கள் தாமே முன் வந்து மனமுவந்து கொடுத்தல் அவசியமாகும். வரிகளைப் பல தடவைகளில் செலுத்தாமல் ஒரே தடவை யில் முழுத் தொகையையும் செலுத்த வேண்டும். இவ்வாறு ஒரு நாடு ஏற்றுக்கொள்ளவேண்டிய பொறுப்புக்கள் பல் அப்பொறுப்புக்களே நாடு ஏற்றுத் கொள்ளாவிட்டால், மக்கட் கூட்டம் பலவித இன்னல் களே அடைய நேரிடும். எடுத்துக்காட்டாக பாகிஸ்தான் பிரிவினே ஏற்பட்ட காலத்தில் நம் நாடு எவ்வளவு அகதிகளே ஏற்க வேண்டியிருந்தது 1 இன்று கிழக்கு வங்காளக் குழப்பமும் இதே நிலையைத் தோற்று வித்துள்ளதன்ருே ? மக்கள் எவ்வளவு இன்னல்களேயும் இக்கட்டுக்களையும் அநுபவித்தனர் ! அநுபவிக்கின் றனர் ! நம் நாடு இலட்சக்கணக்கான அகதிகளே வர வேற்று அவர்கட்கு உண்டி, உடை, உறையுள் முதலிய வற்றைத் தந்து பாதுகாத்ததை பாதுகாப்பதை இவ்வுல கம் கண்டு வியக்கவில்லையா ? உலக வரலாற்றிலேயே இவ்வளவு எண்ணிக்கையுள்ள மக்களைப் பாதுகாத்த தாக வேறு சான்றுகள் காணக் கிடைக்கவில்லை என்று அறிஞர்கள் கருதுகின்றனர். மேலும் நாட்டைப்பற்றி வள்ளுவர் கூறும்பொழுது நல்ல நாடென்ருல் அது கேடு இல்லாத-கேடு அறி யாத-நாடாக இருக்கவேண்டும் என்கின்ருர். ஒருக்கால் பகைவர்களால் துன்பம் வந்துற்ருலும், மழையின்மை முதலியவை நேரிட்டாலும் தன் வளம் மட்டிலும் குறையாதிருந்தால், அதுதான் நாடுகள் எல்லாவற்றி லும் சிறந்த நாடு என்பது அவர் கருத்து. நல்ல கிணறு கள், குளங்கள், ஏரிகள் ஆகியவற்றின் கீழ் நீரும், ஆறுகள், அணைகள் முதலியவற்றின் மேல் நீரும் ஒரு நாட்டிற்கு உறுப்புக்கள் என்று சொல்லவேண்டும். இவற்றைத்தான் வள்ளுவர் இருபுனல்’ என்பர். இவ்வித நீர் நிலைகளின் இன்றியமையாமையைச் சில