பக்கம்:காலமும் கவிஞர்களும்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவள்ளுவர் கண்ட நாடு 73 சமயம் புலவர்கள் அரசர்கட்கு உணர்த்திய செய்தி களைப் புறநானூறு போன்ற சங்க நூல்களால் அறிகின் ருேம். குடபுலவியனர் என்ற புலவர் தலையாலங்கானத் துச் செருவென்ற நெடுஞ்செழியனைப் ப்ாட நேர்ந்த பொழுது, “அடுபோர்ச் செழிய இகழாது வல்லே நிலன் நெளி மருங்கின் நீர்நிலை பெருகத் தட் டோர் அம்ம இவண் தட்டோரே' தள்ளாதோர் இவண் தள்ளாதோரே...' என்று பாடியிருப்பது ஈண்டுக் கருதத் தக்கது. 'கொல் லும் போரையுடைய பாண்டியனே, இதனைக் கடைப் பிடித்து விரைந்து நிறைவேற்றுக, நிலங் குழிந்த விடத்தில் நீரைத் தேக்குவோர். இம்மையும் மறுமையும் புகழ் எய்துவர் ; அவ்வாறு நீர் நிலைகளே உண்டாக்காத வர் இவ்வுலகில் தம் பெயரை நிலை நிறுத்தாதவர் ஆவர்' என்பது இதன் கருத்து. அக்காலத்தில் பாண்டியர்கள், சோழர்கள், பல்லவர்கள் ஏரிகள், குளங்கள் முத்லியன வற்றை நிறுவிய செய்திகள் கல் வெட்டுக்களாலும் செப்புப் பட்டயங்களாலும் பிறவற்ருலும் அறியக் கிடக்கின்றன. அன்றியும், மாரிக் காலத்தில் ஆற்றில் வெள்ளம் வருவதற்குக் காரணமாக இருப்பதும், கோடையில் மாரிக்காலத்தில் உண்ட நீரை உமிழ்ந்து ஆற்றில் நீரின்றி இருப்பதைத் தடுக்கவல்லதுமான மலே ஒரு நாட்டிற்கு மிக மிக அவசியம். மலேயிலிருந்து வரும் அருவி நாட்டிற்குப் பல நன்மைகளைப் பயப்பதாகும். நீரைத் தேக்கித் தேவையான காலத்தில் பயன்படுத்து வதற்கும் மின்சார உற்பத்தி செய்வதற்கும் அருவி பயன்படுகின்றது. அதைத்தான் வள்ளுவர் வருபுனல்’ என்று குறிப்பிடுகின்ருர். தவிர, மலே அரணுகவும் உதவு 7. புறம்-18.