பக்கம்:காலம் தேடும் தமிழ்.pdf/111

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
109

109

தங்களுக்குள்ளாக ஒருவர் மற்றவர் உணர்வையும் கருத்தையும் அறிந்து உணர்ந்து கொள்ள தங்களுக்கென ஒலி வடிவில் ஓசை மொழியை உருவாக்கிக் கொண்டனர். அத்தகைய ஓசைமொழியே அவர்களைப் பிணைத்தது. குழுமமாக ஒருங்கிணைந்து வாழ வழி வகுத்தது. ஒரு கூட்டம் பேசிய, அல்லது எழுப்பிய ஓசைமொழி மற்ற கூட்டத்தினருக்குப் புரியாதபோது, அவர்களுக்குப் புரிய வைக்க முயன்றபோதே மொழிபெயர்ப்பும் உருவாகிவிட்டதென லாம். இவ்வாறு ஒருங்கிணைந்த மானிட வளர்ச்சியின் அடித்தள மாக அமைந்தது மொழிபெயர்ப்புக் கலையே என்பதில் ஐய மில்லை.

தொடர்பின்றி ஆங்காங்கே சிதருண்டு கிடந்த குழுமங்களை ஒருங்கிணைக்கும் இணைப்புச் சக்தியாக மொழிபெயர்ப்பே அமைந்து வந்துள்ளது இதன்மூலம் ஒருவரையொருவர் முழுமை யாக அறிந்துகொள்ள முடிந்தது. ஒருவர் உணர்வை மற்றவர் தெளிவாகப் புரிந்துகொள்ள இயன்றது.

இணைப்புக் கருவியே தடுப்புச் சுவராகும் விந்தை

இவ்வாறு மனிதர்களின் இண்ைப்புக்கும் பிணைப்புக்கும் உறுதுணையாக அமைந்துவந்த மொழிபெயர்ப்புக் கலையானது கணிக்கவியலா காலம் முதற்கொண்டு பிறப்பு முதல் இறப்பு வரை உணர்வு பெயர்ப்பு, கருத்துப் பெயர்ப்பு, மொழிபெயர்ப்பு என வெவ்வேறு வகைகளில் மனிதகுலத்துக்குப் பயன்பட்டு வருகிறது. அன்றும் சரி, நாகரிகமும் அறிவியல் துறையும் பெருவளர்ச்சி பெற்று ள்ள இன்றும் சரி, மனிதகுல ஒற்றுமைக்கும் பிணைப் புக்கும் ஆக்கமும் ஊக்கமும் அளித்து வருவது மொழிபெயர்ப்புத் துறையே என உறுதியாகக் கூறலாம்.

அவ்வப் பகுதி மக்களிடையே உருவாகி, அவர்களை ஒற்றுமைப்படுத்த பெருந்துணையாயமைந்த மொழிகளே. தனித் தனி மொழி பேசும் மக்களை ஒன்றிணைய விடாமல் தடுக்கும் தடுப்புச் சுவராகவும் அமைந்துள்ளது. அவ்வம் மொழி பேசும் மக்களை தனிமைப்படுத்தி விடுகிறது. சுருங்கச் சொன்னால் அந்தந்தப் பகுதி மக்களை மொழி ஒருவகையில் சிறைப்படுத்தி விடுகிறதெனலாம். ஆயினும், மொழிபெயர்ப்புக் கலையொன்றே மொழி எனும் தடுப்புச் சுவர்களைத் தகர்த்து, எல்லைக் கோடு களைக் களைந்து, மனித குலத்தையே ஒன்றிணைக்கும்

இணைப்புச் சங்கிலியாக அமைந்துள்ள தெனலாம்.