பக்கம்:காலம் தேடும் தமிழ்.pdf/13

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
11

11

வளர்ச்சிக்கான வழிவகைகளைப் பற்றிச் சிந்திக்கத் தூண்டு வதே யாகும் வரலாற்றை முற்றாகப் புறக்கணித்துவிட்டு எந்த மாற்றத்தையும் திருத்தத்தையும் செய்துவிட முடியாது. அப் படியே செய்தாலும் அஃது நிலைக்க முடியாது, இது வரலாறு தரும் படிப்பினையாகும்.

அறிவியல் தமிழ் வளர்ச்சிக்கு மொழி அளவில் நாம் ஆற்ற வேண்டிய பணிகளைக் குறித்து அமரர் ஜி. ஆர். தாமோதர னார். அண்ணா பல்கலைக் கழகத் துணைவேந்தர் டாக்டர் வா. செ. குழந்தைசாமி போன்றவர்கள் ஆழமாகவும் அழுத்த மாகவும் சிந்தித்து தம் கருத்துக்களை இதழ்கள் வாயிலாகவும் நூல்கள் வாயிலாகவும் முனைப்புடன் பரப்பி வருகின்றனர். முன் என்றுமே காணாத அளவுக்கு அறிவியல் தமிழ் பற்றிய எண்ண மும் கருத்தும் மக்களிடையே அழுத்தம் பெற்று வருகிறது.

ஆட்சி மொழியாக மட்டுமின்றி முதல் அனைத்துக் கல்வி மட்டத்திலும் தமிழ் பயிற்சி மொழி பாயமையும் எனும் சட்டத்தை நிறைவேற்றி, தமிழின் ஆக்கபூர்வமான வளர்ச்சிக்கு வழியமைத்த பெருமை மாண்பமை சி. சுப்பிரமணியம் அவர் களையே சாரும். அதே ஆண்டில் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் நடந்த பயிற்சி மொழிக் கருத்தரங்கு ஒன்றில் ஏற் பட்ட நிகழ்ச்சி, என் எதிர்காலப் பணி அறிவியல் தமிழ்ப் பணியே என்பதைச் சுட்டிக் காட்டியது. அன்று முதல் இன்று வரை கண்ணடை போட்ட குதிரை போன்று, அறிவியல் தமிழ்ப் பணியையே இலட்சியப் பயணமாகக் கொண்டு வருகிறேன்.

என் நோக்கத்தை இனிது நிறைவேற்ற தென்மொழிகள் புத்தக நிறுவனம் ஏற்ற தளமாக அமைந்தது. மருந்தியல் முதல் பற்றவைப்பு ஈராக எழுபதுக்கு மேற்பட்ட அறிவியல் நூல்களை மூலமாகவும் மெ: Nபெயர்ப்பாகவும் பதிப்பிக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. 1981 முதல் யுனெஸ்கே கூரியர் திங்களிதழின் தமிழ்ப் பதிப்பு நிர்வாக ஆசிரியராகப் பணியாற் றும் பேறும் கிட்டியது.

உலகின் தலைசிறந்த அறிவியல் வல்லுநர்கள் எழுதும் அறி வியல் கட்டுரைகளை உடனுக்குடன் தமிழில் பெயர்த்தளிக்கும் பணி. அறிவியலின் அனைத்துப் பிரிவுகளையும் பற்றிய நுட்பச் செய்திகளைக் கூறும் கட்டுரைகளைக் கருத்துச் சிதைவின்றி தமிழில் பெயர்க்க எளிதாக முடிகின்றது இதழ்தோறும் அறி வியல் தமிழ்க் கலைச் சொற்களை உருவாக்க வேண்டியுள்ளது. சொல்லாக்கப் பணியும் சுலபமாகச் செய்ய இயலுகின்றது.