பக்கம்:காலம் தேடும் தமிழ்.pdf/148

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
146

148

கிறதோ அந்த மொழியின் இயல்புக்கும் இலக்கண விதிகளுக்கு மேற்ப மாற்ற திருத்தங்களைப் பெற்றுச் செம்மையடைகின்றன. காலப் போக்கில் இத்தகைய சொற்கள் அம்மெ ழியின் மூலச் சொற்கள் போன்ற தோற்றத்தையும் பெற்று விடுகின்றன.

பிறமொழிக் கலப்பு தவிர்க்கவியலாதது

தமிழைப் பொருத்தவரை இவ்வாறு வடபுல மொழிகள் போன்ற வேற்று மொழிகளிலிருந்து அல்லது வேற்றுத் திசைகளி லிருந்து தமிழில் வந்து கலக்கும் சொற்கள், அச்சொற்களில் இடம்பெறும் எழுத்துகள், தமிழ் எழுத்துகளின் ஒலிப்பிலக்கணத் திற்கேற்ப மாறுதல் பெற வேண்டும் என்ற விதிமுறையை,

"வடசொற் கிளவி வடவெழுத் தொரீஇ எழுத்தொடு புணர்ந்த சொல்லாகுமே”

என்ற சூத்திரத்தின் மூலம் தெளிவாக்குகிறார் தொல்காப்பிய €orr ff.

இதிலிருந்து பிற மொழிச் சொற்கள் தமிழில் வந்து கலப்பது தவிர்க்கவியலாதது என்பது தொல்காப்பிய இலக்கண விதிமுறை களிலிருந்தே தெளிவாக அறிய முடிகிறது.

மொழித் தூய்மை கானல் நீரா?

எனவே, மொழித்துய்மை என்பது ஒருவகை கானல் நீரைப் போன்றதாகும். இன்னும் சொல்லப் போனால், தூய மொழி என்று உலகில் எந்த மொழியும் இருப்பதாகத் தெரியவில்லை. பல்வேறு மொழிபேசும் மக்களுக்கிடையே ஏற்பட்ட உறவு, மொழியிலும் ஊடுருவி நிற்பது தவிர்க்க இயலாத தொன்றாகும்.

இன்னும் ஆழமாக ஆராய்வோமானால், மக்களின் பேச்சு மொழியே திருத்தமடைந்து இலக்கியத்தில் இடம் பெறுகிறது. இலக்கியம் கண்டதற்கே இலக்கணம் என்பது மொழியியலார் (Upto-6);

காலம் விழுங்கிய கலைச்சொற்கள்

இலக்கியச் சொற்களினும் சற்று வேறுபட்டது அறிவியல், தொழில் நுட்பத்துறைச் சொற்கள். தமிழர்கள் சங்ககாலம் முதற் கொண்டே அறிவியல் சிந்தனையிலும் தொழில்நுட்ப அறிவிலும் சிறந்து விளங்கினர் என்பதை முன்னரே கண்டோம். வணிக நிமித்தம் உலகின் பல்வேறு பகுதிகளுக்கும் கப்பல் செலுத் தியவர் தமிழர், வானோங்கி நிற்கும் கோயில் முதலான