பக்கம்:காலம் தேடும் தமிழ்.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

206

208

மேற்கொண்ட தீர்மானப்படி அமைக்கப்பட்ட குழுவின் பரிந் துரையின் அடிப்படையில் பெரியார் உருவாக்கிப் பயன்படு திய எழுத்துச் சீர்மையே இன்றைய அரசுத் தமிழ் சீர்திருத்தம் 1 41-இல் மதுரையில் நடைபெற்ற மதுரை மாநாடும் 1945இல் சென்னையில் நடைபெற்ற மாநாடும் எழுத்துச் சீர்திருத்த, முயற்சியை மேற்கொண்டன. அதன் பயனாக எழுத்துச் சீர்மை கொண்ட தமிழை 'சுதேசமித்திரன்’ சில காலம் கைக்கொண்டு பின்னர் கைவிட்டு விட்டது, தொடந்து பெரியார் விடுதலை இதழ் வாயிலாகக் கையாண்டு வந்தார் அவர் நூற்றாண்டு விழாவின்போது, காலத்தின் தேவையாகக் கருதி இவ்வெழுத்துச் சீர்மையை ஆரசு ஏற்றுச் செயல்படுத்தியது.

கணினி ஊழியும் எழுத்துச் சீர்மைத தேவையும்

இவ்வாறு காலத்தின் வளர்ச்சிப் போக்கும் மக்களின் அவசியத் தேவைகளுமே எழுத்தில் மாற்றத்தையும் திருத்தத்தை' யும் காலங்காலமாக ஏற்படுத்தி வந்துள்ளது. அதே போன்று இன்று தொலை எழுதி (Telex) களின் பெருக்கமும் கணினிப் பொறிகளின் அதிகரிப்பும் தமிழ் எழுத்துகளை மேலும் சீர்மைப் படுத்த வேண்டிய அவசிய அவசரத் தேவையை அழுத்தமாக உணர்த்தி வருகிறது.

கருவிக்கேற்ப எழுத்துச் சீர்மை

ஒலையில் எழுத்தாணி கொண்டு எழுதுவதற்கும் கல்லில் உ ளிகொண்டு பொறிப்பதற்காகவும் செப்பேட்டில் செதுக்குவதற் காகவும் எழுத்தில் தேவையான அளவுக்கு மாற்றமும் திருத்த மும் செய்யப்பட்டது போன்றே அச்சுப் பொறிக்காகவும் தட்டச் சுப் பொறிக்காகவும் அண்மையில் எழுத்துச் சீர்மை செய்யப் பட்டது

இன்று அறிவியலின் வியத்தகு விளைவாக வெளிவந்துள்ள கணினி (Computer) பொறிகள் அச்சுப் பணி, தட்டச்சுப் பணி, தொலை எழுதி (Telex) ப்யணி ஆகிய அனைத்துப் பணிகளை ஒன்றாகச் செய்யும் வகையில் அமைந்துள்ளது. எனவே, இஃது கணினி ஊழியாகவே கருதப்படுகிறது. நவீன உலகின் அனைத் துத் துறைகளிலும் நீக்கமற இடம்பெற்றும் வருகிறது. கணினிப் பொறியில் எளிதாகக் கையாளத்தக்கவாறு தமிழ் எழுத்துகளில் சீர்மை பெற முயற்சி மேற் கொள்வது காலத்தின் கட்டளை எனக் கொள்வதே பொருத்தமுடையதாக இருக்கும். '