பக்கம்:காலம் தேடும் தமிழ்.pdf/22

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
20

20

இசை, நாடகமென முப்பிரிவாகக் கொண்டு தமிழை வளர்த்து வளம் பெறச் செய்தது ஆகிய பெருமைகளோடு உலகளாவிய முறையில் தமிழ் மாநாடுகளை நடத்தித் தமிழை வளர்க்க, வளப் படுத்த முனைந்த பெருமையும் தமிழினத்துக்கு உண்டு.

பெருமை பேசினோமே சிந்தித்தோமா?

தமிழின் பெருமையைப் பேச முனைந்த அளவுக்கு அதன் வளர்ச்சி பற்றி சிந்திக்கத் துணிந்தோமா என்பது ஐயமே.

தமிழ்மொழி மீது ஏற்பட்ட பற்றும் பாசமும் "மொழி என்பது கருத்தை உணர்த்தும் கருவியே" என்ற எண்ணத்தைக் கூடச் சற்று பின்னுக்குத்தள்ளிவிட்டு, தமிழ்மொழியைத்தெய்வநிலைக்கு உயர்த்தி விட்டோம். இதன் மூலம் தமிழ் மொழியை வணங்கிப் போற்றுவதில் பேரார்வப் பெருக்குக் கொள்ளலானோம். இதன் விளைவாக 'தமிழை ஒரு மொழி என்ற அளவில் விமர்சனம் செய்வதைக் கூட உவந்து ஏற்கும் மனப்பான்மை நம்மில் பலருக்கு இல்லாது போயிற்று. வெறுமனே தமிழை வாழ்த்திப் போற்றுபவர்கள் பற்றாளர்களாகப் கருதிப் புகழப் பட்டனர். தமிழை மொழியியல் அடிப்படையில் விமர்சிக்க முனைந்தோர் மொழிப் பற்று அற்றவர்களாகக் கருதப்பட்டனர்.

ஆற்றல் மிக்க ஊழியனே மொழி

இத்தகைய போக்கால் தமிழைப் பொருத்தவரை மக்களி டையே ஒருவித பூஜா மனப்பான்மை வளர்ந்து வலுப்பெற்றதே தவிர, நமக்குப் பயன்படுவதற்கென நமக்கு நாமே உருவாக்கிக் கொண்ட ஆற்றல்மிக்க ஊழியனே மொழி' என்ற உணர்வு நம் உள்ளத்தில் இன்றும் கூட இடம் பெறுவதாகத் தெரியவில்லை.

இதனால், தமிழார்வமிக்க பலரும் தமிழ் மொழியைக் காத்துப் போற்றுவதில் காட்டும் ஆர்வத்தில் ஒரு பகுதியை தமிழ் மொழி யைக் காலத்தின் தேவைக்கேற்ப வளர்ப்பதற்கான வழிமுறை களில் செலுத்த முனைவதாகத் தெரியவில்லை. வெறும் மொழிப்

பற்று மொழியை வளர்த்துவிடாது என்பதை அழுத்தமாக உணர வேண்டும்.

காலத்திற்கேற்ப வளர்தலே வளர்ச்சி

காலத்தின் போக்குக்கேற்ப வளராத எந்தமொழியும் தேக்க

நிலை அடைந்தே தீரும் என்பது உலக மொழிகளின் வரலாறு அழுத்தமாக உணர்த்தும் செய்தியாகும்.