பக்கம்:காலம் தேடும் தமிழ்.pdf/220

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

218

£18

எழுந்தது தேவையைக் கருத்திற்கொண்டு புதிய இலக்கண நூல்கள் எழவேண்டிய நிலையும் உருவானது.

காலத்தின் இத்தகைய இன்றியமையாத் தேவையை நிறைவு செய்யும் பெரும் பொறுப்பை ஏற்றவர்களுள் தலையாயவர்களாக விளங்குபவர்கள் சமண சமயப் புலவர்களே ஆவர்.

சமணப் புலவர்களின் இலக்கண தொண்டு

தமிழ் இலக்கியத்தைவிட இலக்கண வளர்ச்சியில் சமணப் புலவர்கள் நாட்டம் செலுத்தியதற்குச் சிறப்பான காரணமுண்டு. காமச் சுவை போற்றுதலையும் நாடகம், இசையின்பம் ஆகிய வற்றைத் துய்த்தலையும் சமண சமயம் அனுமதிக்காத காரணத் தினால், அறநெறி கூறும் நீதி இலக்கியங்கள் மூலமும் இலக் கணப் படைப்புகள் மூலமும் தங்கள் சமயப் பிரச்சாரத்தைத் தொடர்ந்து செய்யும் உத்தியைக் கைக்கொண்டு உழைக்க லாயினர்.

“இறையனார் அகப்பொருள் இலக்கண நூல்

தொல்காப்பியத்திற்கு அடுத்ததாக எழுந்த இலக்கண நூலாகக் கருதப்படுவது (இறையனார்) அகப் பொருள் ஆகும்.

தொல்காபியர் காலத்திற்குப் பின்னர் அகப் பொருள் இலக்கியங்களில் இலக்கண மாற்றங்கள் மெதுவாக ஏற்பட்டு வந்தன. தொல்காப்பிய அகப் பொருட் செய்யுட்களைப் படித்து அறிந்து கொள்வதிலும் இடர்ப்பாடு ஏற்பட்டு வந்தது போலத் தோன்றுகிறது. எனவே, தொல்காப்பிய அகப் பொருள் இலக் கணங்களைச் சுருக்கித் தெளிவாக மீண்டும் கூறவேண்டிய அவசியத் தேவையும் அக்காலத்தே எழுந்ததாகத் தெரிகிறது. இதன் பொருட்டு தொல்காப்பிய அகத்திணை இயல் களவியல், கற்பியல், பொருளியல் ஆகியவற்றில் இருநூறுக்கு மேற்பட்ட சூத்திரங்களில் பரவிக் கிடந்த அகப் பொருள் செய்திகளை, அறு. து சூத்திரங்களுக்குள் அமைத்து, கற்பதற்கு எளிதாக்கிய பெருமை இவ்விலக்கண நூலுக்கு உண்டு.

அத்துடன், தொல்காப்பியத்தில் பெருந்திணையும் கைக் கிளையும் அகப்பொருள் துறைகளைாகக் கூறப்பட்டிருந்தது. ஆயினும் அத்துறைகளில் சங்கச் சான்றோர் விரும்பி இலக்கியம் படைக்கவில்லை