பக்கம்:காலம் தேடும் தமிழ்.pdf/34

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
32

82

முதலான எழுவகைப் பொருள்களால் நிரம்பப்பெற்ற ஏழு கடல் கள் இருக்கின்றன என்பதும், சகரனுடைய பிள்ளைகள் தோண் டிய படியால் சாகரம் (கடல்) உண்டாயிற்றென்பதும், மலைகள் பண்டையக் காலத்தில் சிறகுகளைப் பெற்று ஆகாயத்தில் இங்கு மங்கும் விருப்பம்போல் பறந்து திரிந்து கொண்டிருந்தபோது, அவற்றின் சிறகுகளை இந்திரன் வெட்டி வீழ்த்தியபடியால், அவை பறக்க முடியாமல் பூமியிலே விழுந்து நகர முடியாமல் ஆங்காங்கே கிடக்கின்றன என்பதும், பூமியைப் பாய்போல சுருட்டிக் கொண்டு போய் ஒர் அசுரன் கடலுக்குள் ஒளித்து வைத்தான் என்பதும், இவை போன்ற கற்பனைக் கதைகளுமே நம்முடைய பண்டைய பூகோள நூல்கள், பூமியைச் சூரியன் சுற்றிவருகின்றதென்பதும், இராகு, கேது என்னும் பாம்புகள் சூரிய சந்திரர்களை ஒரு பகை காரணமாக விழுங்குவதால் சூரிய, சந்திர கிரகணங்கள் உண்டாகின்றன என்பதும், தக்க னுடைய சாபத்தினால் சந்திரன் தேய்வதும் சிவனுடைய அருளினால் அது வளர்வதும் நேரிடுகிறதென் பதும் இவை போன்றவைகளுமே நமது பண்டைக்கால வானசாத்திரங்கள். மேகம் கடலில் மேய்ந்து, தண்ணிரைக் குடித்து வானத்திற் சென்று மழையாகப் பெய்கிறதென்பதும், இந்திரனுடைய கோபத்தினால் இடி மின்னல்கள் உண்டாகின்றன என்பதும், இவை போன்ற கற்பனைகளுமே பண்டைக்கால இயற்கைச் சாத்திரங்கள். இத்தகைய கற்பனைக் கதைகளைப் படித்தும் கேட்டும் பண்டைக்கால மக்கள் உண்மையுணராமல் மூடத் தனத்தில் ஆழ்ந்திருந்தனர்.

'ஐரோப்பியரின் தொடர்பு உண்டான பிறகு, பாதிரிமார் கள் பாடசாலைகளை அமைத்து நமது நாட்டுச் சிறுவர் சிறுமி களுக்கு ஐரோப்பிய வழக்கத்தைப் பின்பற்றிப் பாடங்களைப் போதிக்க முற்பட்ட பொழுது, எழுதப் படித்தல், கணக்குப் போடுதல் என்னும் மூன்றுடன் மட்டும் நில்லாமல் பூகோள நூல். வான நூல்,இயற்கைப் பொருள் நூல்,க்ஷேத்திரக் கணிதம், தேச சரித்திரம் முதலிய விஞ்ஞான நூல்களையும் கற்பிக்கத் தொடங் கினார்கள். பாடசாலைகளில் இத்தகைய விஞ்ஞான நூல்களைப் போதிக்கத் தொடங்கியபடியால், தமிழில் இந்நூல்கள் எழுதப் பட வேண்டிய அவசியம் ஏற்பட்டது. முதலில் பாதிரிமாரும், மிசனரிமாரும், பின்னர் அரசாங்கத்தாரும், விஞ்ஞான நூல் களைத் தமிழில் எழுதி அச்சிட்டும், பிறரை எழுதும்படி தூண்டி யும் இச்செய்கையில் பேருதவி செய்திருக்கிறார்கள்."

எனக் கிருத்துவமும் தமிழும், என்னும் நூலில் கூறியுள்ளது சிந்தனைக்குரியதாகும்.