பக்கம்:காலம் தேடும் தமிழ்.pdf/35

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
33

$8

நிலைபெற்ற அன்றையத் தமிழரின் அறிவியல் சிந்தனை

சமுதாய நோக்கிலும் அறிவியல் சிந்தனையிலும் சிறப்புமிகு காலமாகக் கருதிப் போற்றப்படும் சங்க காலம் முதலாக இலக் கியச் செய்திகளாக ஒருசில அறிவியல் நுட்பக் கூறுகளை இலை மறை சாயாக ஆங்காங்கே காண முடிந்தாலும் அவைபற்றிய முழுநூல் ஏதும் கிடைத்ததாகத் தெரியவில்லை. பழைய இலக் கியங்களில் வானவியல் செய்திகள் சிறு குறிப்புகளாகச் செய்யுட் களிடையே காணப்படுவதோடு தனி நூல்களும் இருந்ததாக உரையாசிரியர்கள் மூலம் குறிப்பு கிடைக்கிறது. ஒருவேளை அந்நூல்கள் கால வெள்ளத்தில் மறைந்து போயிருக்கலாம். அதே போன்று மருத்துவச் செய்திகளைக் கூறும் சித்தர் இலக் கியங்கள் பல கிடைத்த போதிலும் அதனை பரிபாஷை அறிந்த வர்கள் மட்டுமே பயன்படுத்த முடியும் என்ற நிலையே உருவாக் கப் ட்டிருந்தது. இந்நுட்பம் அறிந்த ஒருசில மருத்துவக் குடும் பத்தினரே இத்தகைய மருத்துவக் கல்வியை வழிவழியாகப் பெற முடிந்தது இன்றும் கூட கோயில் கட்டுமானத் திறமையும் சிற்ப வடிக்கும் திறனும் சில குடும்பங்களின் வழிவழியாகத் தொடரும் தொழில் திறமையாகவே இருந்து வருகிறது.

மேலும், அன்றைய சமுதாய வளர்ச்சியும் அதையொட்டிய சமூகத் தேவைகளும் மிக மெதுவாக நத்தை வேகத்தில் நகர்ந்து வந்ததாகக் கொள்ளலாம். ஆனால், ஐரோப்பியத் தொழிற் புரட் சிக்குப் பின்னர் ஏற்பட்ட பொருளாதார வளர்ச்சியும் தொழில் துறை முன்னேற்றமும் அதன் விளைவாக ஏற்பட்ட இயந்திரப் பெருக்கமும் எண்ணிப்பார்க்க முடியாத அளவுக்குச் செழிப் பூட்டின. இதற்கெல்லாம் மூலாதாரமாக அமைந்த விஞ்ஞான வளர்ச்சியோ "ஜெட்’ வேகத்தில் அமைவதாயிற்று.

அறிவியல் வளர்ச்சி வேகமும் பாரதி துடிப்பும்

கடந்த ஐம்பக ஆண்டுகளில் அசுர வேகத்தில் விஞ்ஞான மாற்றங்கள் சங்கிலித்தொடர்போல் எல்லாத் துறைகளிலும் நிகழ்ந்து வருகின்றன. இதற்கு ஒரளவேனும் ஈடுகொடுக்கும் முறையில் நம் சிந்தனைப் போக்கிலும் அதற்கு ஆதாரமான தமிழ் மொழியிலும் மாற்றங்களை ஏற்படுத்தி அறிவியல் தமிழ் வளர்ச்சியைத் துரிதப்படுத்த வேண்டும். இல்லையெனில் காலம் நம்மை வெகுவாகப் பின்னுக்குத் தள்ளி முன்னோக்கிச் சென்று விடும் என்பது திண்ணம்.

இருபதாம் நூற்றாண்டுக் கவிஞர்களிலேயே அறிவியல் சிந்தனைப் போக்கு மிக்கவராகத் திகழ்ந்தவர் பாரதி. எதிர்

8