பக்கம்:காலம் தேடும் தமிழ்.pdf/96

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
94

94

இருதயம் தனக்கும் இன்புடன் செல்லல் இரத்த ஓட்டமாய் இயம்பலாம் நன்நே"

எனப் பாடுகிறது. எளிய சொற்களைக் கொண்டு தெளிவாகக் கூறும் இப்பாடல் இலகுவாய் மனனம் செய் கற்கேற்றவாறும் அமைந்துள்ளது கவனிக்கத்தக்கதாகும்

சிறு நீரகத்தைப் பற்றிப் பாடும்போது, சாதாரண உவமான, உவமேயங்களைக் கொண்டு அழகுற விளக்குகிறார்,

'சிறுநீர்ப் பித்தியைச் செப்பக்கேண்மின்

அவரை விதைபோல் ஆரிரு உறுப்பு நிறம் கருஞ்சிவப்பாய் நிலவும் அவை தாம்"

எனச் சாதாரணமாக வாழ்க்கையில் பயன்படுத்தும் வழக்குச் சொற்களைக் கொண்டே கூறி மனதில் பதியச் செய்கிறார்.

வைடமினைப் பற்றிப் பாடும் போது,

"உடலுறுப்புகள் ஒழுங்காயியங்க

நால்வகை உணவுப் பொருள்களை யன்றி வேறு பொருள்களும் வேண்டும் அவைதான் ஏ. பி. சி. டி. ஈ. யென ஐந்தாம்'

என வைடமின்களின் ஆங்கிலப் பெயர்களை அழகுபட இணைத்து எளிதாக மனதில் பதியும் வண்ணம் கூறுகிறார்.

அடுத்து இரசாயனப் பிரிவில் உள்ள பாடல்களில் வட மொழிச் சொற்கள் நிறையவே பயன்படுத்தப்பட்டுள்ளது, காரணம், இவ்வறிவியல் கவிதை நூல் இயற்றப்பட்ட கால கட் டத்தில் ஆங்கிலக் கலைச் சொற்கள் பலவற்றிற்கு வடமொழிச் சொற்களே நிகரான தமிழ்க் கலைச் சொற்களாகச் சொல்லப் பட்டு வந்ததேயாகும். தாதுவைப் பற்றிப் பாடும்போது,

"தாது சோடியம் பாஸ்வதி கஜமே

பொட்டாசியம் பாஸ் வதிகஜம் தானே கால்சம் பாஸ்வரி கஜமே சோடியம் ஹரிதகயுதி கால்சம் ஹரி தகயுதிப் பொருள்கள் சேர்ந்த ஐக்கியப் பொருளாம் தாதுப் பொருள்கள் தம்முடல் தன்னில் ஒடும் இரத்தம் ஒளியுடன் இருக்கவும் எலும்பு பற்கள் இவைகளைக் காக்கவும் சீரண நீர்களைச் செவ்விதின் ஆக்கவும் பயன்படு மென்று பகர்ந்தனர் அறிஞர்"