பக்கம்:காலிங்கராயன் கால்வாய்.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

108 காலிங்கராயன் கால்வாயில் முதலில் கல் மதகுகள் அமைக்கப்பட்டுப் பூட்டும் வசதியில்லாமல் தண்ணீரை நீர்ப்பாசனத்திற்கு உபயோகித்து வந்தார்கள். தற்போது ஒவ்வொரு மதகிற்கும் பூட்டும் வசதியுள்ளது. இதனால் தண்ணீர் சேதமாவது தடுக்கப்படுகிறது. கால்வாயில் நீர் பகிர்ந்தளித்தலைக் கவனிக்க கால்வா யை நான்கு பகுதியாகப் பிரித்திருக்கின்றனர். முதல் பகுதிக்கு ஒரு நீர்ப்பதிவாளரும் இரண்டு நீராணிகளும் பொறுப்பாக உள்ளனர். அவர்கள் கால் வாயைக் கவனித்துக் கொண்டு நீர் பகிர்ந்தளித்தலையும் கவனிக்க வேண்டும். ஏனைய மூன்று பகுதிகட்கும் ஒரு கரைக் கண்காணிப்பாளரும் நீராணிகள் நால்வர் வீதமும் கவனித்து வருகிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் ஜுன் மாதம் 16 ஆம் தேதி மாலை 6 மணிக்கு நீர்ப்பாசனத்திற்குத் தண்ணீர் அனுமதிக்கப் பட்டு ஏப்ரல் 30 ஆம் தேதி மாலை 6 மணி வரை பத்தரை மாதங்களுக்குத் தொடர்ந்து தண்ணீர் வழங்க வேண்டும். மிகத் தொன்மையான இப் பவானி யாற்று அணை மூலம் 16 மைலிலிருந்து 563 மைல் வரை முப்போகத்திற்குக் காலிங்கராயன் கால்வாய்த் தண்ணீர் பெறுவது காலிங்கராயன் கால்வாய்ப் பகுதி உழவர்களின் அடிப்படைப் பூர்வீக உரிமையாகும். இது 2.11-1966 அன்று பொதுப்பணித்துறை வெளியிட்ட 2647 ஆம் எண் அரசு ஆணையால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 101 மாதம் தண்ணீர் விடுவதை 9 மாதமாகக் குறைத்துப் பாசனத்தை இருபோகமாக்கித் தாராளமாகப் பாசனத்திற்குத் தண்ணீர் விட வேண்டும் என்ற ஒரு கருத்தும் உள்ளது. கால்வாயில் ஆங்காங்கே சிறு ஓடைகள் மூலம் வெள்ள நீர் வந்து சேர்கிறது. அந்த நீரால் வாய்க்காலின் முழு அளவு நீர்மட்டம் உயர்ந்து கரைக்கு ஆபத்து உண்டாகும் நிலையில் இருந்தால் ஆங்காங்கே அமைக்கப்பட்டுள்ள தாம்பாங்கிகள் எனப்படும் மணற்போக்கிகளின் மூலமாகப்