பக்கம்:காலிங்கராயன் கால்வாய்.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

112 கோட்டைக் கால்வாயில் 207 மதகுகள் 70 ஆகக் குறைக்கப் பட்டன. காலிங்கராயன் கால்வாயில் உள்ள 789 (769+20) மதகுகளை 226 ஆகக் குறைக்க 73-74 இல் பொதுப்பணித் துறையினரால் திட்டமிடப்பட்டது. ஆனால் விவசாயிகளின் தீவிர எதிர்ப்பால் இத்திட்டம் நிறைவேற்றப் படவில்லை. கொடிவேரி அணையில் தடப்பள்ளி, அரக்கன் கோட்டை வாய்க்கால்களைப் பார்வையிட்டு, இன்னும் கொஞ்சம் மதகுகள் குறைப்பில் மாற்றம் செய்து இத்திட்டம் கொண்டுவந்தால் தண்ணீர் வீணாவதைத் தடுக்கலாம். காலிங்கராயன் கால்வாயில் 18 ஆம் நூற்றாண்டில் 1840 மதகுகள் இருந்தன. பின் அவை 769 ஆகக் குறைக்கப் பட்டன என்பதை நினைவில் கொள்ளல் அவசியம். பாவனி ஆற்றின் நீளம் 104 மைல் ஆகும். ஆற்றின் நீர்ப்பிடிப்புப் பகுதி மலைப்பகுதியில் 640 சதுர மைல்கள். ஆற்றின் பயன்பாட்டுப் பகுதி சமவெளியில் 1730 சதுர மைல்கள் ஆகும். காலிங்கராயன் முக்கிய அணையின் நீளம் 757.00 சராசரி அளவு 541.15 வெள்ளத் தடுப்புக் கரை நீளம் 1740.00 வெள்ளத் தடுப்புக் கரை உச்சி அளவு 552.66 மைய அணைக்கட்டின் நீளம் 854.00 சராசரி அளவு 544.13 முரியான் அணைக்கட்டு நீளம் 1350.00 சராசரி அளவு 542.90 உயர்ந்த அளவு வெள்ள வருகை 9-12-72 548.05 உயர்ந்த அளவு தண்ணீர் வெளியேற்றம் 9-12-72 1267.77 காலிங்கராயன் கால்வாயில் சராசரி 11,000 Mc Ft. தண்ணீர் பாசனத்திற்காக விடப்படுகிறது.