பக்கம்:காலிங்கராயன் கால்வாய்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

11 தலைநகரமாகிய பூந்துறை தேவார வைப்புத் தலமாகும். நாலாறு நாட்டில் மேலான பூந்துறை என்பர் புலவர். இந்நாட்டின் தலைமைத் தலம் சீர் மிகுந்த சென்னிமலை யாகும். நாட்டுவளம் காவிரி, பவானியாகிய பேராறுகளாலும், நொய்யல், அனுமநதி போன்ற சிற்றாறுகளாலும் எண்ணற்ற குளங் களாலும் குன்றாவளமும் குறையா நலமும் பெற்றுத் திகழுவது பூந்துறைநாடு. புளி, மா, அரசு, தென்னை , கமுகு, வாழை, பலா முதலிய மரங்களில் பூத்துக் குலுங்கும் பூங்கொத்துக்களிலிருந்து பொங்கிப் பெருகும் தேன் வளமுடை வயல்களிற் பாய்ந்து பூந்துறை நாட்டில் நெல் விளைகிறது என்று எழிலுறக் கவிதை வடிக்கின்றார் * சரவணையா' என்ற புலவர் தன் மேழிவிளக்கம் என்ற நூலிலே! | பதிந்திறுணி மாவரசு தேங்கமுகு வாழைபலா வந்துகுலை சாய்ந்து மடல்விரிந்து-சிந்தினதால் வாய்ந்தரச மொடுபெருகி வயல தனிற் செந்நெல்விளை பூந்துறை செய்நாடு' என்பது அவர் கனிக்கவிதையின் இனிப்பு வரிகள்.. வறட்சி மிக்க காடுகளில் எல்லாம் சுவை மிகுந்த உணவு படைத்துண்பதற்குக் காரணமாக இருக்கின்ற சிறு செந்நெல் விளைகிறது. அங்குச் செந்தாமரை செங்கதிரோனைத் தேடி நின்று வாடுவதில்லை. தாமரையின் கேள்வனாம் தங்கப் பரிதியோனே அம்மங்கையை நாடி வருகின்றான்; கூடி மகிழ்விக்கின்றான், நீர்வளம் மிகுதியாக இருப்பதன் காரணமாக நாட்டின் எல்லாப் பகுதிகளிலும் வெண்மை யான முத்துக்கள் தோன்றுகின்றன. பொய்கைக் கோதை யாம் அல்லியைப் பொங்கிவரும் பெரு நிலவோன் தன் ஒளிக்கைகளால் அள்ளியணைக்கின்றான் நாட்டிலெங்கும் ஈவோர் இருந்தும் இரப்போர் இல்லை. ஏன்? எல்லா வீடு