பக்கம்:காலிங்கராயன் கால்வாய்.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

பிற்சேர்க்கை எண்-1 காலிங்கராயன் கல்வெட்டுக்கள் திங்களூர் அழகப்பெருமாள் கோயில் தெற்குச்சுவர்க் கல்வெட்டு ஸ்ரீ வீரபாண்டிய தேவர்க்கு யாண்டு மூன்றாவது ஸ்வஸ்தி ஸ்ரீ திரிபுவனச் சக்கரவர்த்திகள் கோனேரின்மை கொண் டான் குறுப்பு நாட்டுத் திங்களூர் சுந்தரபாண்டிய விண்ணகரம் பெருமாள் கோயில் திருப்பதி ஸ்ரீ வைஷ்ணவர் களுக்கும் நம்பிமார்களுக்கும் இந்நாயனார்க்கும் அமுதுபடி உயுள்ளிட்டு வேண்டும் வெஞ்சனங்களுக்கும் இந்நாட்டுத் தாளூன்றி நீர் நிலத்துக்கும் புன் செய்க்கும் இறுக்கும் கடமை ஒட்டச்சும் காலும் கலமும் நத்தவரியும் அந்தராயகாணம் உப்பாயம் தறியிறை உள்ளிட்ட மேலிறை கீழிறையும் எண்ணெயும் காணியும்ஞ் சாமந்த வேண்டுகோளும் குற்ற தெண்டமும் எலவை ஒகவை மற்றும் எப்பேர்ப்பட்டனவும் உட்பட தந்தோம் இந்நாயனார் அழகப் பெருமாளுக்கு இப்படிக்கு சந்திராதித்தவரை செல்வதாகக் கல்லிலும் செம்பிலும் வெட்டி இவ்வூர் குடியேற்றிக் கொள்க இப்படிக்கு காலிங்கராயன் எழுத்து. விசயமங்கலம் நாகேசுவரசுவாமி கோயில் மகாமண்டபம் வடபுறச் சுவர்க் கல்வெட்டு ஸ்வஸ்தி ஸ்ரீ திரிபுவனச் சக்கரவர்த்தி கோனேரிமேல் கொண்டான் ஸ்ரீ வீரபாண்டிய தேவனேன் எமக்குச் செல்லா நின்ற யாண்டு அஞ்சாவது சகரை யாண்டு ஆயிரத்திரனூத் திரண்டு பெறட்டாசி மாதம் முதல் குறுப்பு நாட்டு விசய