பக்கம்:காலிங்கராயன் கால்வாய்.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

128 சரவண காங்கேயன் சொல்லும் வசனம் நீ போயி இந்தப் பேர்ப் படிக்கி இந்தச் சீட்டு உன் கயிக்கு வந்தால் உனக்கே நேமுகஞ் செய்து முடிக்கிறோமென்று சொன்னார்கள். அப்போ கோவிலுக்குள்ளே அடியெடுத்து வைக்கவும் அம்மன் மடியிடையில் வயிலாயிருந்து ஒரு நீர்ச்சர்ப்பம் வடமுகாக்கினி போலும் சீறிக் கோபித்தெழுந்தது கண்டு பயந்து நடு நடுங்கி பிரண்டு கொண்டு பின்னிட்டுவந்து சோபந்தட்டி மயங்கி விழுந்தவனை காளியணன் எடுத்து மார்போடணைத்து நெஞ்சத்தட்டி அம்மனைத் தியானிச்சு தண்ணீர் முகத்துக்கெரச்சு பயத்தை நிறுத்தி அவன் மனசைத் தைரியப்படுத்திப் பண்ணினான். அதன் பிற்பாடு பத்துப் பேருங்கூடி காளியண்ணனை உன் பேர்ப்படிக்கிச் சீட்டு எடுத்து தரச் சொன்னார்கள். அதன் பிறகு சுனையிலே ஸ்நானஞ் செய்து அம்மனை வலப்பிரதட்சிணமாய் சுத்திவந்து கோவிலுக்குள் புகவும் நாகசர்ப்பம் கோவம் மாறி மாயமாய்ப் போய்விட்டது. அதன் பிறகு அம்மன் பாதத்திலேயிருந்த திருவுளச்சீட்டு எடுத்து வந்து பத்துப்பேருங் காணத்தக்கதாகச் சபையிலே வைத்தான் பத்துப் பேரும் சீட்டெடுத்துப் பார்த்து உன் பேரு படிக்குச் சீட்டுயிருக்குதென்று அனைவருங்கூடிச் சொன்னார்கள். யெண்ணை மங்கலத்திலேயிருக்குற ஆனைமலை காளி யண்ணனுக்குச் சாதிப் பட்டயங்குடுத்து பாகுபச்சடமும் ரெட்டப்படி பாக்கு வெத்திலையும் குதிரை குடை தீவட்டி யும் ஒத்தைக் கொம்பும் ஒத்த கும்பமும் மகப்பட்டையும் கட்டக்கயிறும் வெட்ட வாளும் அடிக்க ஆத்தி யாக்கையும் அஷ்டாவுக்காரமும் வேண்டிய விருதுகளும் அளியாத தருமமும் சிலா சாசின பட்டயம் அமைந்தது.