பக்கம்:காலிங்கராயன் கால்வாய்.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

பிற்சேர்க்கை எண்-3 காலிங்கராயன் கைபீது! தாராபுரம் துக்குடி பொள்ளாச்சி தாலுக்கா ஊற்றுக் குழி பாளையக்காரர் காலிங்கராயக் கவுண்டன் என்னப் பட்டவருடைய வமிசாவளி முதலான கைபீது என்ன வென்றால் : பூர்வீகம் பூர்வத்தில் சோழ தேசத்தில் தொண்டை மண்டலத்து வேளாளரென்று பேர் பிரசித்திப்பட்ட நற்குடி நாற்பத் தெண்ணாயிரம் பசுங்குடி பன்னீராயிரம் ஆக அரவதுனாயிர கோத்திரக்காரர்களில் பிற்காலும் ரிஷபகிரிச் சோளராசா மகளை மோரைச் சரிந்த சேரராஜா பாணிகிரகணம் பண்ணிக் கொண்ட படியினாலே சோளராசாவின் மகள் தனக்கு சீதனம் தன் தகப்பனாரைக் கேட்டுக் கொண்ட படியினாலே அந்தச் சமயத்தில் நற்குடி நாற்பத் தெண்ணாயிரம் குடியில் எண்ணாயிரம் குடி சீதனம் கொடுத்தபடியினாலே அப்போ வரப்பட்ட வேளாளனுக்கு தென் திசை நோக்கி வந்தபடியினாலே தென் திசை வேளாளர் என்று பேர்வரப் பட்டது. கொங்கில் குடியேற்றம் சேர தேசத்துக்கு வரப்பட்ட வேளாளருக்கு சேரனுக்கு கொங்கரென்றும் பேர் இருக்கிற படியினாலே கொங்கு வேளாளரென்றும் கொங்கு இருபத்துனாலுநாடு என்றும் இதன் பிரதி தமிழக அரசின் பழஞ்சுவடி நூலகத்தில் உள்ளது. இது அங்குப் பிரதி செய்யப்பெற்றது. எண். டி. 3044.