பக்கம்:காலிங்கராயன் கால்வாய்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

21 வும் ஆனான். சடையவர்மன் வீரபாண்டியனும் கி.பி. 1253 ஆம் ஆண்டு அவ் வீரனைப் பாராட்டிக் 'காலிங்க ராயன்' என்ற சீர்மிகும் சிறப்புப் பட்டப்பெயரும் அளித் தான். அவரே நமது கால்வாய் வெட்டிய வெள்ளோடைச் சாத்தந்தை காலிங்கராயர் ஆவார். ஏறக் குறைய தன் 30 ஆம் வயதில் ஆட்சி அலுவலில் சேர்ந்த காலிங்கராயன் (சுமார் கி.பி. 1253 ஆம் ஆண்டு) பாண்டிய நாட்டின் வடக்குப் பகுதியாகிய கொங்கு நாட்டிற் குத் தலைவராக நியமிக்கப்பட்டார். 'உத்தர மந்திரி' ' உத்தர ராயன்' 'சுந்தர பாண்டிய கலிங்கராயன்' என்ற சிறப்புப் பட்டப் பெயர்களும் பெற்றமைக்குக் கல்வெட்டுச் சான்றுகள் உள்ளன. வீரபாண்டியன் சுந்தர பாண்டியன் குலசேகர பாண்டியன் என்ற மூன்று கொங்குப் பாண்டிய அரசர்கள் காலத்தில் சுமார் 40 ஆண்டுகள் அரசியல் தலைவராக விளங்கிப் பெருமைகள் பெற்றவர் நம் காலிங்கராயன். கொங்கு நாட்டில் முடிசூடா மன்னராகத் திகழ்ந்தவர் காலிங்கராயர். தன் பெயரில் நாணயம் அச்சிட்டார் என்பதனையும் அறிகின்றோம். காலிங்கராயன்-பெயர்க்காரணம் லிங்கையன் என்பது காலிங்கராயனின் இயற்பெயர் என்பதால் அப் பெயரை ஒட்டியே பட்டப் பெயர் காலிங்க ராயன் என்றும் வழங்கப் பெற்றிருக்கலாம் என்றும் கருத லாம். தமிழரசர்கள் பெற்ற கலிங்க வெற்றியின் அடையாள மாகவே 'காலிங்கராயன்' என்ற பட்டப்பெயர் வழங்கப் பட்டது. 'வமிசாவளி' காலிங்கராயன் என்பதற்கு ஒரு புதிய பெயர்க் காரணம் கூறுகிறது. கலிங்கு என்ற சொல்லுக்கு ஏரி, மதகு, நீர் வழியும் அணைக்கட்டு என்று பொருள் உண்டு. கலிங்கல் என்ற சொல்லும் 'ஏரி நிறைந்து நீர் போகும் வழி' என்ற பொருள் தரும். எனவே, காலிங்கராயன் அணை கட்டிய தன் காரண மாகவே கலிங்குராயன்' அல்லது 'கலிங்கல்ராயன்' என