பக்கம்:காலிங்கராயன் கால்வாய்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

22 வழங்கப்பெற்றது. பின்னர் அப் பெயரே 'காலிங்கராயன்' என்று மாறியது என்ற கருத்து அதில் கூறப்படுகின்றது. "அணையும் கட்டிவச்சபடியினாலே காலிங்கக் கவுண்டன் என்னும் பேர் வரப்பட்டுப் பிரசித்திப்பட்டவனாய் இருக்கும் நாளையில் என வரும் பகுதியால் இக் கருத்தை அறியலாம். ஆனால் அணை கட்டுவதற்கு முன்னரும் காலிங்கராயன் என்ற பெயர் நம் தலைவனுக்கு வழங்கியதென்பதையும் அணை, குளம் கட்டாத பிற தலைவர்களும் பல்வேறு காலங்களில் காலிங்கராயன் என்று பெயர் பெற்றிருப்பதை யும் நோக்கும்போது இக் கருத்து அவ்வளவு வலியுடையது அன்று என்பது தெரிகிறது. எனவே 'காலிங்கராஜன்' என்ற பெயரே 'காலிங்கராயன்' என்று வழங்கப்பட்டதென அறியலாம். வமிசாவளி மற்றொரு வகையிலும் பெயர்க்காரணம் கூறுகிறது. 'காலிங்கன்' என்பது தான் முன்பு வழங்கிய பெயர். பின்னர் ராயர் சமஸ்தானம் உள்ள பெனு கொண்டாவிற்குச் சென்று பன்னிரண்டு ஆண்டுக்காலம் காத்திருந்து பேட்டி கண்டு 'ராயர்' பட்டம் பெற்றுக் காலிங்கராயர் என்று புகழ் பெற்று விளங்கியதாகவும் கூறுகின்றது. பாண்டியர் ஆட்சியே கொங்கு நாட்டில் பரவியிருந்தது என்பதாலும் காலிங்கராயன் என்ற பெயரிடும் வழக்கம் கி.பி. 12ஆம் நூற்றாண்டிலிருந்தே தொடர்ந்து உள்ளது என்பதாலும் 'காலிங்கராயன்' என்ற பெயரே அரசன் அளித்த பட்டப்பெயராக நம் தலைவனுக்குள்ளமையை விளக்கும் கல்வெட்டுக்களைத்தான் ஆதாரங்களாகக் கொள்ள வேண்டும் என்பது தோன்றுகின்றது. செல்வச் செழிப்பு உயர்பதவி வகித்த காலிங்கராயன் செல்வாக்குடன் மிகுந்த செல்வந்தராகவும் இருந்திருக்கவேண்டும். அணை