பக்கம்:காலிங்கராயன் கால்வாய்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

40 காலிங்கராயனே அணைகட்டிக் கால்வாய் வெட்டினார் என்ற முடிவுக்கு வரமுடிகிறது. அதன் காலம் கி.பி. 1265 ஆகும். செவிவழிச் செய்தி காலிங்கராயன் அணை கட்டிக் கால்வாய் வெட்டிய அரிய செயல்பற்றிச் செவிவழிச் செய்தியாக சில கதைகள் வழங்குகின்றன. காலிங்கராயன் பண்ணை குலத்தைச் சேர்ந்த தன் அத்தை வீட்டில் திருமணத்திற்குப் பெண் கேட்டதாகவும் "எங்கள் நடுவீட்டில் வாய்க்காலா கொண்டுவந்து விடுகிறாய்?' என்று அத்தை கேட்க அவ்வாறே வாய்க்கால் வெட்டி அத்தை வீட்டு நடுவே விட்டார் என்று கூறுவர். வேறு சிலர் திருமண நிச்சய தினத்தன்று பெண் வீட்டுச் சமையல்காரன் மாப்பிள்ளை வீட்டார்களுக்குச் சமையல் செய்ய என்ன அரிசி போடுகிறது என்று கேட்க " அவர்கள் கம்பு விளைகிற சீமையில் இருப்பவர்கள். என்ன அரிசி என்று தெரியவா போகிறது: பழைய அரிசி போடு, என்று சொல்ல அதுகேட்டு நெய்விளையும் பூமி ஏற்படுத்தக் கால்வாய் வெட்டினார் என்றும் கூறுவர். காலிங்கராயன் தன் சொந்த ஊராகிய வெள்ளோட்டுப் பகுதியைக் கால்வாய்ப் பாசனத்தால் வளம்பெறச் செய்ய வில்லை. எனவே இக்கதைகள் நம்புதற்கு உரியவை அல்ல. அரசியல் உயர் அலுவலனான காலிங்கராயன் திட்டமிட்டு நாட்டு நல்வாழ்வின் பொருட்டுச் செய்த பெரும் பொதுப் பணியே அணையும் கால்வாயுமாகும். வமிசாவளி கூறும் செய்தி வமிசாவளி பெரும்பாலும் இக்கதையை ஒப்புக்கொள்ளு கிறது. ஆனால் காலிங்கராயன் பண்ணைக் குலத்தைச் சேர்ந்த மாமன் மைத்துனன் வீட்டில் தன் மகனுக்குத்