பக்கம்:காலிங்கராயன் கால்வாய்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

பிற்காலத்தில் பணிபுரிந்த இவர்கள் இருவரும் நம் பாராட்டுக்குரியவர்கள் ஆவர். காலிங்கராயன் பவானியாற்றில் கட்டிய மற்றொரு அணை டணாயக்கன் கோட்டை என்பது பவானி ஆற்றங்கரை யில் இருந்த புகழ்வாய்ந்த பழைய கோட்டையாகும். இப்போது அக்கோட்டை கீழ்பவானி அணையில் மூழ்கி விட்டது. டணாயக்கன் கோட்டைப் பகுதியில் ஊருக்குச் சற்று மேற்கே பவானி ஆற்றில் அணை ஒன்று கட்டிச் சிதைந்த நிலையிலும் 1800 வாக்கில் 400 ஏக்கர் நிலத்திற்குப் பாய்ந்து வந்தது. கீழ்பவானி அணை கட்டிய பின் இந்த அணை முழுவதும் அணையினுள் மறைந்து விட்டது. 1799 இல் மேக்ளியாட் இந்த அணையைப் பழுதுபார்த்தார். தூர்ந்த கால்வாயைச் செப்பனிட்டார். இந்த அணைக்கட்டைக் கட்டியவர் வேளாளர் லிங்கையன் என்பவர் என்று ஆவணங்களிலிருந்து தெரியவரு கிறது. 1933 ஆம் ஆண்டு டிசம்பர் 29 இல் வெளிவந்த முல்லைக்கொடி என்னும் மாத இதழில் இந்த அணை பற்றிய குறிப்பு எழுதப்பட்டுள்ளது. காலிங்கராயன் அணை கட்டின பட்டயம் மூலம் காலிங்க ராயனின் இயற்பெயர் லிங்கையன் என்பதனை அறிகின் றோம். டணாயக்கன் கோட்டை அணை தொன்மையான தாகவும் உள்ளது. எனவே பவானியின் இறுதியில் அணை கட்டிய காலிங்கராயன் பவானியின் தொடக்கப்பகுதியிலும் அணை கட்டியுள்ளார் என்பதைத் தெளிவாக அறிகின் றோம். இது மிகவும் அரிய செய்தியாகும். புக்கானன் எழுதிய யாத்திரைக் குறிப்புக்களிலும் இந்த அணைபற்றிக் கூறப்பட்டுள்ளது. அவருடைய குறிப்பிலும் இவ்வணை கட்டியவர் பெயர் லிங்கையன் என்றே காணப்படுகிறது.