பக்கம்:காலிங்கராயன் கால்வாய்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

ஆசிரியர் மையம் போன்ற இடங்களிலும் விரிவாகப் பல கோணங்களில் காலிங்கராயன் கால்வாய் பற்றி எழுதும், பேசும் வாய்ப்புக் கிடைத்தது. என்றாவது இவ்வரலாறு விரிவான நூல் வடிவம் பெறவேண்டும் என அந்நாளில் பலர் விரும்பினர். மக்களிடையே கால்வாய் வரலாறு மெல்ல மெல்லப் பரவத் தொடங்கியது. அமரர் வி. எம். கைலாசக் கவுண்டர் அவர்கள் பல இடங்களுக்குச் சென்று ஆய்வு செய்ய வசதி செய்து தந்தார்கள். டாக்டர் எல். கே. முத்துசாமி, பொள்ளாச்சி பாராளுமன்றத் தேர்தலில் திரு. மோகன் ராஜ் காலிங்கராயர் போட்டியிட்டபோது நான் எழுதிய சிறு நூலை 25000 பிரதிகள் வெளியிட்ட மு. சின்னசாமி, சி. துரைசாமி போன்றவர்கள் இவ்வரலாறு நூல் வடிவம் பெற விரும்பினர். என்பால் அன்பு கொண்டு உரையாடும் போது கருப்பண கவுண்டர், எஸ். ஆர் .பி. ராஜப்பா, செங்கோட கவுண்டர், ஏ.பி. சின்னசாமி, டாக்டர் பொ. இளங்கோ போன்ற சாத்தந்தை குலப் பெருமக்கள் 'நூல் எழுதுக' என்று தூண்டினர். நூல் வடிவம் பெற்று வெளி வரும்போது இப்பெருமக்கள் இன்று இல்லையே என்று ஏங்குகின்றேன். அப்பெருமக்கள் ஆசிதான் என் கனவு நனவாகியதற்குக் காரணமாகும். சித்தோடு திரு. குமார நடவரச ஈவப்பனார் அவர்கள் பல்லாண்டுகள் முன்பே வரலாறு நூல் வடிவம் பெற விரும்பி னார். பாலமடை அம்மன் கோயில் திருப்பணி செய்த திரு யு. ஆர். சின்னசாமிக் கவுண்டர், டாக்டர் நல்லசாமி, டாக்டர் நடராசன் போன்றவர்கள் இம் முயற்சியை வரவேற்றனர். திரு கே. ஆர். நல்லசிவம், எழுமாத்தூர் சென்னியப்பன், சிவகிரி பழனிசாமி ஆகியோர் கொங்கு விவசாயிகள் அனைவரும் ஆதரிக்க வேண்டிய அரிய முயற்சி என்று பாராட்டுரைத்தனர்.