பக்கம்:காலிங்கராயன் கால்வாய்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

87 என்று ஹன்னான் கூறிய குறையை நீக்கவே இத்திட்டத் தைத் தயாரித்துள்ளார் என்றறிகின்றோம். காலிங்கராயன் கால்வாய் இப்பொழுது நொய்யல் வரைதான் செல்லுகிறது. கால்வாய் இறுதியில் நொய்யலாற்றில் கலக்கிறது. ஒரு கால்வாயின் வழியாக மீதியாகும் தண்ணீரை நொய்யலைக் கடந்து செல்லச் செய்து அமராவதி (கரூர்) வரை கொண்டு சென்றால் புதிதாக 13,000 ஏக்கர்கள் பாயும்” என்று காலிங்கராயன் விரிவுத்திட்டத்தை 21-3-1872ஆம் ஆண்டு ரூபாய் 8,71,000 செலவில் தயாரித்துக் கொடுத்தார் வெட்டர்பர்ன். அரசு அனுமதி கொடுத்தும் போதிய பணம் இல்லாத காரணத்தால் இத்திட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. பின் இத்திட்டம் எவருடைய நினைவிற்கும் இன்றுவரை வரவில்லை. அருண்டேல் காலிங்கராயன் கால்வாயிலுள்ள சிறு குறைகளைச் சுட்டிக் காட்டுகின்றார் கோவை மாவட்டத் தலைவராக இருந்த அருண்டேல். "காலிங்கராயன் அணையின் தலை மதகிலேயே 20 அல்லது 30 ஏக்கர்கள் பாய்வேண்டிய நீர் வருகிறது. ஆனால் இரவும் பகலும் இடைவிடாமல் தலை மதகில் நீர் பாய்ந்தும் வளப்படுத்துகின்ற நிலப்பகுதி 2 அல்லது 3 ஏக்கர்தான். மற்றத் தண்ணீர் அனைத்தும் கழிவு நீராக வீணாகச் செல்லுகிறது" என்று வருந்துகின்றார் அருண்டேல். மதகுகளைப் பற்றியும் பின் வருமாறு கூறுகின்றார். “காலிங்கராயன் கால்வாயில் பல மதகுகள் சரியாக அமைக்கப்படவில்லை. பொதுவாக அணையின் அருகில் தலைப்புக் கால்வாயில் இருக்கும் மதகுகளே அவ்வாறு மிக மோசமாக இருக்கின்றன. உறுதியற்ற சாதாரணக் கற்களாலும் மண்ணாலும் ஒரு சுரங்கம் போலக்