பக்கம்:காலிங்கராயன் கால்வாய்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

நடத்தும் அரசர்கள் குறிப்பறிந்து வரிவசூல் செய்து ஊத்துக் குழியில் வாழ்ந்து வந்தனர். 9ஆம் பாளையக்காரர் நஞ்சைய காலிங்கராயர் காலத்தில் கொங்கு நாட்டை ஆண்டவர் மதுரை விசுவநாத நாயக்கர் ஆவார். எல்லாப் பாளையக்காரர்களையும் மதுரைக்கு அழைத்துப் பேட்டி யளித்தார் விசுவநாத நாயக்கர். அக்காலத்தில் திருநெல்வேலிச் சீமையில் ' அஞ்சு ராசாக்கள்' (5 அரசர்கள்) கோட்டை கட்டிக்கொண்டு மதுரை நாயக்கருக்கு அடங் காமல் கலகம் செய்து வந்தனர். விசுவநாத நாயக்கர் ஆணைப்படி நஞ்சைய காலிங்கராயர் அவர்கள் ஐவரையும் போரில் அடக்கிச் சிறையெடுத்து மதுரைக்குக் கொண்டு வந்தார். நாயக்கர் காலிங்கராயரைப் பாராட்டிப் பல பரிசு கள் அளித்ததோடு 'பராக்கிரமன்' என்ற பட்டத்தையும் அளித்தார். மதுரைக் கோட்டையில் 51 ஆம் கொத்தளத் துக்கு அவரைத் தலைவராக்கினான். பாளையத்தைச் சேர்ந்த கிராமங்களின் வரிகள் அனைத்தையும் நீக்கினான். 72 பாளையப்பட்டில் ஊத்துக்குழியை ஒன்றாக மதுரை நாயக்க அரசர்கள் நியமித்தது ஏனைய கொங்கு நாட்டுப் பட்டக்காரருக்கும் பாளையக்காரருக்கும் இல்லாத தனிச் சிறப்பாகும். 19 ஆம் பாளையக்காரர் விருமாண்டக் காலிங்கராயர் காலத்தில் மதுரை அரசுக்கும் மைசூர் அரசுக்கும் போர் ஏற்பட்டது. அப்போர்கள் பெரும்பாலும் ஆனைமலை சூழ்ந்த கொங்குநாட்டுப் பகுதிகளுக்காகவே நடந்தது. எனவே தங்கள் அதிகாரத்தையும் நிலங்களின் உரிமைகளை யும் காத்துக் கொள்வதே பாளையக்காரர்களுக்குப் பெரிய பொறுப்பாக இருந்தது. 22 ஆம் பாளையக்காரர் வரைக்கும் இந்த நிலையே நீடித்தது. 23 ஆம் பாளையக்காரர் நஞ்சைய காலிங்கராயர் காலத்தில் ஆனைமலைப் பகுதி மைசூர் இம்முடி ராஜாவின் வசம் இருந்தது. நஞ்சைய காலிங்கராயர் குடகின் மீது