பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருநெல்வேலி சரித்திரம் 92

அடக்கும் படி சேதுபதி அனுப்பப்பட்டான். அவனும் தனக்கிட்ட வேலையை மிக நிறைவாகச் செய்து திரும்பினான். கலகக்காரர்களின் தலைவன் கொல்லப்பட்டான். மற்றவர்கள் கடுமையாகத் தண்டிக்கப்பட்டார்கள். சில மாதங்களில் எங்கும் அமைதி நிலவியது. இந்தத் தொண்டுக்காக அந்தச் சேதுபதிக்கு மன்னார் கோவிலுக்கு அருகேயுள்ள ஒரு பெரிய துண்டு நிலம் பரிசாக அளிக்கப்பட்டது. முத்துக்குளித்தலைக் கவனிக்கும் வேலையும் அவனிடம் விடப்பட்டது. முத்துக் குளித்தல் அரசக் கருவூலத்துக்கு அதிகப்படியானப் பணத்தை வழங்கி வந்தன (நெல்சன் எழுதிய ‘மதுரை’).

பாம்பன் தீவுக்கு வடக்கே முத்துக்குளித்தலால் வரும் வருமானம் இராமநாதபுரச் சேதுபதியின் உரிமையாகி விட்டது. பரம்பரையாகக் கன்னியாகுமரியின் பெரும்பாகம் வரை நடைபெறும் முத்துக்குளித்தல் வருமானம் முன்னைப் போலவே அரசன் சொத்தாய் இருந்தது. திருச்சிராப்பள்ளியைத் தலைநகராக்கியவுடன் இத்தகைய ஆணையரை நியமிக்க வேண்டுவது மிகவும் இன்றியமையாததாயிற்று.

சேரமாதேவிக்கருகிலுள்ள ஒரு கல்வெட்டில் 17 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் வீரராகவ முதலியார் என்ற ஒருவரைக் காரியகர்த்தர் அல்லது வீரப்ப நாயக்கரின் பிரதிநிதி என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.

திருமலையின் தம்பி குமாரமுத்து என்பவன் பட்டத்திற்கு வர உரிமை கொண்டாடினான்; ஆனால், சில உடன்படிக்கையின் படி தன் உரிமையை விட்டுவிட்டு அதற்குப் பதிலாகச் சிவகாசி மாவட்டத்தையும் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள மற்ற எல்லைகளையும் பெற்றுக் கொண்டான்.

1700 இல் எழுதப்பட்ட பிரஞ்சு கிறிஸ்தவப் பாதிரியாரின் கடிதத்தில் சில காலத்திற்குமுன் திருநெல்வேலிக் கரையிலுள்ள ஒரு பெரிய காட்டில் புலிகள் அதிகமாய் வசித்தன. அவற்றின் எண்ணிக்கை மிக அதிகமாய் இருந்ததால், அவை அக்காட்டுக்கருகே வசிக்கும் மக்களை இரவில் எங்கும் வெளியே செல்லவிடாது துன்புறுத்தி வந்தன. ஒவ்வொரு கிராமத்திலும் காவல் வைக்கப்பட்டது. பெரிய நெருப்பை வளர்த்து அந்த அரக்க விலங்குகளைத் துரத்தினார்கள். பகல் நேரத்திலும் பயணம் செய்பவர்கள் கேடில்லாமலிருக்க இயலாது. பலர் மறைந்து போயினர். அவர்கள் ஐயமறப் புலிகளால் தனியான இடங்களில் கொல்லப்பட்டு வந்தார்கள். மலைப்பிரதேசத்திற்கு