பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

107 கால்டுவெல்

மலையாளச் சொல்லாகிய நாயர் என்பதைத் தவறுதலாகப் பயன்படுத்தியுள்ளதாகத் தெரிகிறது. மற்ற குறிப்புகள் யாவும் உண்மை. அவர் குறிப்பிட்டுள்ள செய்திகளில் ‘அரசவரி’ என்பது மிக முக்கியமான செய்தியாகும். இதனால், விசயநகர இராயர்கள் வரி வசூலித்தார்கள் என்பது தெரிகிறது (இவர்களைப் போர்ச்சுகீசியர் நரசிங்க அரசர்கள் என்று கூறுவது வழக்கம்). தங்கள் எசமானர்களிடமிருந்து சுதந்தரமடையாத தளகர்த்தர்கள் மூலமாக மதுரையிலும் மற்ற இடங்களிலிருந்தும் வரி வசூல் செய்யப்பட்டு வந்தது. கடற்கரை ஒரமாயுள்ள கிறித்தவப் பரவர்கள் கிராமத்தைப் படகர்களின் கொடுமைகளினின்றும் காப்பாற்ற பலவிதமான முயற்சிகளைச் சேவியர் மேற்கொண்டார். திருவாங்கூர் அரசருடைய ஆட்சிக்குட்பட்ட கிறித்தவப் பரவ மக்களுக்காக உடன்பாடு செய்தது அத்தகைய முயற்சிகளுள் ஒன்றாகும். சேவியர் இந்த அரசனை இக்குவிடிபிரிமஸ் என்ற வினோதப் பெயரிட்டு வழங்குகிறார். இப்பெயரில் விளக்கம் தரத்தக்க ஒரு பகுதி இறுதியிலுள்ள ‘பிரிமஸ்’ என்ற சொல்தான். இது ஒருவேளை திருவாங்கூர் அரசர் ஒவ்வொருவர் பெயருக்குப் பின்னும் தொடர்கின்ற படைவீர (க்ஷத்திரிய)ப் பட்டப்பெயராகிய ‘வர்மா’ என்பதைக் குறிக்கலாம். திருவாங்கூர் அரச வரிசைப் பட்டியலின்படி அக்காலத்திலிருந்த அரசரின் பெயர் உதயமார்த்தாண்ட வர்மா என்பது. அவர் 1537 முதல் 1560 வரை அரசாண்டார். இப்பட்டியலிலுள்ள எந்தப் பெயரும் எந்தத் தமிழ்ப் பெயரும் ‘அக்கிரமம்’ என்ற சொல்லுக்கேற்ற குணங்கள் பெற்றிருப்பதாகத் தெரியவில்லை. ஒரு சமயம் சேவியருடைய கடிதங்களைப் பெயர்த்தெழுதியவர் தவறுதலாக அவ்வாறு எழுதியிருக்கலாம். அந்த அரசருக்குச் சிலகாலத்திற்கு முந்திய திருவாங்கூர் அரசராகிய வீர ரவியை இப்பெயர் குறிப்பிடுமா?

சேவியர் அந்த அரசரைத் திருவாங்கூரின் மிகப் பெரிய அரசர் என்று வருணிக்கிறார்; தென்னிந்தியா முழுவதும் அந்த அரசர் அதிகாரத்திற்குட்பட்டிருந்ததெனவும் கூறுகிறார். கொடுமைக்குள்ளாகிய பரவர்களை அந்த அரசருடைய குடிகள் என்று குறிப்பிடுகிறார். அந்த அரசரைச் சேர்ந்த நெருங்கிய உறவினன் டேயில் (இந்த இடத்தின் பெயர் டாயில், டேல் அல்லது தாலா என்பது. மணப்பாடியிலிருந்து 6 மைல் தூரத்திற்கும் கடற்கரையிலுள்ள மீன்பிடிக்கும் கிராமமாகிய தலை என்ற ஊரை இப்பெயர் குறிப்பிடலாம். என்றாலும், ஒரு திருவாங்கூர் அரசனுடைய உறவினன் ஏழ்மை நிறைந்த மீன்பிடிக்கும் கிராமத்தில் வசித்து வந்தான் என்றால் அதை நம்புவது கடினந்தான். அதை விடப் பார்போஸா அரசனையே கண்ட காயலில் அவ்வுறவினன் வசித்து வந்தான் என்பது இயற்கைதான். காயல் என்பதே டாயல் என்று எழுத்துப்