பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருநெல்வேலி சரித்திரம் 124


முத்துக்குளித்தார்கள் என்பதைக் குறிப்பிட்டுள்ளார்கள். மார்க்கபோலோ, ஸுஸர் பிரடரிக்கு என்பவர்களுடைய விளக்கங்களை ஏற்கெனவே நான் கூறியிருக்கிறேன். என்றாலும், தெளிவும் முழுமையுமுடைய இந்த விளக்கங்களையும் விட்டுவிட நான் விரும்பவில்லை.

1700 இல் நடந்த முத்துக்குளிப்பை பற்றி மார்ட்டின் தரும் குறிப்பு

ஆண்டின் தொடக்கத்திலேயே டச்சுக்காரர்கள் பத்து அல்லது பன்னிரண்டு மரக்கலங்களை வெவ்வேறு திசைகளில் அனுப்புவார்கள். இவர்கள் எந்த இடத்தில் முத்துக்குளிப்பது சிறந்ததாய் இருக்கும் என்பதை ஆராய்வார்கள். ஒவ்வொரு மரக்கலத்திலுமுள்ள முத்துக்குளிப்பவர்களும் ஆங்காங்கே இறங்கி ஒருசில ஆயிரம் முத்துச்சிப்பிகளைக் கொண்டுவந்து தனித்தனியே கடற்கரையில் குவித்து வைப்பார்கள். பிறகு அவற்றைத் திறந்து ஆராய்வார்கள். ஒவ்வொரு குவியலிலுள்ள முத்துகளும் முத்து ஆய்வு செய்பவர்களால் ஓர் எகு அல்லது அதிக மதிப்புடையதாயிருக்கும் என்று சொல்லப்பட்டால் அந்த முத்துச்சிப்பிக் குவியல் எடுத்த இடத்தில் முத்துக்குளித்தல் சிறந்த முத்துகளைத் தரும் என்பதை அறிந்து கொள்வர். முப்பது செளருக்கு (Sour) அதிகமாக மதிப்பில்லாதிருந்தால், அந்தச் சிப்பி எடுத்த இடத்தில் முத்துக் குளிப்பவர்களை வேலைக்கமர்த்தி அதை நடை பெறச் செய்வதற்கான செலவிற்குத் தேவையான பணத்தைவிட அதிகமான பணம் கிட்டாது. ஆய்வு முடிந்தவுடன் அந்த ஆண்டில் முத்துக்குளித்தல் நடைபெறுமா நடைபெறதா என்பது பொதுமக்களுக்கு அறிவிக்கப்படும். முத்துக்குளித்தல் நடந்தால், அது ஆரம்பமாகும் தேதியன்று மக்கள் கூட்டம் கூட்டமாக முத்துக்குளிக்கும் கரையில் கூடுவார்கள். வியாபாரிகள் பலவிதமான வியாபாரப் பொருள்களுடன் அங்கு வந்திருப்பார்கள். துறைமுகத்தில் கப்பல்கள் வந்து கூடியிருக்கும். முரசுகள் முழங்கும். துப்பாக்கி வேட்டுகள் எழுப்பப்படும். டச்சு ஆணையர் (கமிஷனர்) கொழும்பிலிருந்து வந்து இறங்கும்வரை எல்லா இடங்களிலும் மிகுந்த பரபரப்பு இருக்கும். அவ்வாணையர் மிக்க ஆடம்பரத்துடன் வந்து இறங்கித் துப்பாக்கிகள் வெடித்து விழாவைத் தொடங்கி வைக்கக் கட்டளையிடுவார். அதற்கடுத்தாற்போல முத்துக் குளிக்கும் மரக்கலங்கள் எல்லாம் நங்கூரம் வலித்துச் சமுத்திரத்திற்குள் நகரும். அவற்றிற்குமுன் சிறிய டச்சுக் கப்பல்கள் முன்னோடிபோல முத்துக்குவியல் நடைபெறவேண்டிய எல்லை வரையறையைக் காட்ட வலப்புறமும் இடப்புறமும் விலகிச் சென்று நிற்கும். ஒவ்வொரு