பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

127 கால்டுவெல்


முதல் நாள் எடுத்த முத்துகளை எல்லாம் அரசனுக்கோ அல்லது சேதுபதிக்கோ - முத்துக்குளித்த இடம் யாருடைய எல்லையைச் சேர்ந்ததோ அவர்களுக்கு - உடனுக்குடன் ஒதுக்கிவைப்பார்கள். வழக்கமாக அடிக்கடி சொல்லப்படுவதுபோல் டச்சுக்காரர்கள் இரண்டாவது நாள் முத்துகளை உரிமை பாராட்டி எடுத்துக் கொள்வதில்லை.

அவர்களுக்கு இலாபமடைய மற்ற பல நிலையான வழிகள் இருந்தன. அவற்றுள் முக்கியமானது, பணச்செலாவணி அதிகமில்லாத இடங்களில் ரொக்கப் பணத்தை அதிகமாக்குதல். இதனால் அவர்களுக்குப் பொருள்கள் மிக மலிவாகக் கிடைத்து வந்தன. வெவ்வேறு ஆண்டுகளில் காணப்படும் முத்துகளின் எண்ணிக்கை மிக அதிகமாக மாறுபடும். சில ஆண்டுகளில் அவர்கள் தண்ணீரில் மூழ்கி இருக்கும் வரை அவர்களால் எவ்வளவு அள்ள முடியுமோ அவ்வளவையும் அவர்கள் அள்ளிக் கொண்டு வரத் தக்கபடி அதிகமாயிருக்கும். சில ஆண்டுகளில் அங்கும் இங்கும் சில சிப்பிகள் கிடைப்பதே கடினம். 1700இல் ஆய்வு மிகவும் திருப்தியாயிருந்தது. அதனால், பல மரக்கல உரிமையாளர் இசைவுச் சீட்டு பெற்று முத்துக் குளித்தார்கள். ஆனால், அவ்வாண்டு பலன் அதிக இழப்பாய் ஆயிற்று. முதல் நாள் குவியலில் எல்லா முத்துக்குளிப்பவர்களாலும் சில ஆயிரம் சிப்பிகளே தொகுக்கப்பட்டன. இரண்டாவது மூன்றாவது நாள்களில் ஒரு சிப்பி கூட அகப்படவில்லை. பலமான கடற் சுழல்கள் தண்ணீருக்கடியில் ஏற்பட்டு மண்ணைப் புரட்டி வந்து முத்துகள் மேல் படியச் செய்துவிட்டதே இதற்குக் காரணமாயிருக்கலாமென்பது ஊகிக்கப்பட்டது. எக்காரணமாய் இருந்தபோதிலும், எப்போதிலும் அப்போது ஏற்பட்ட இழுப்பு மிகுதி. சில வியாபாரிகள் சிறந்த ஆள்களை வைத்திருப்பவர்களுக்கு நிரம்பச் சிப்பிகள் கிடைக்கும் என்ற எண்ணத்துடன் பெருந்தொகைப் பணத்தை முன்பணமாக நம்பிக் கொடுத்திருந்தார்கள். அவர்கள் பணம் முழுவதையும் இழந்து விட்டார்கள். அதேபோல, மரக்கலச் சொந்தக்காரர்கள் குளியர்களுக்கு முன்பணம் கொடுத்திருந்தமையால், அவர்களுக்கும் இழப்பு ஏற்பட்டது. டச்சுக்காரர்களுக்கு வழக்கமான இலாபம் கிடைத்தது.

முத்துக் குளியல்களின் இழப்பு

மார்க்கபோலோ, சீசர், பிரடரிக்கு என்பவர்களால் விவரிக்கப்பட்டுள்ள ஆரம்ப முத்துக்குளியல்களில் இத்தகைய இழப்பு ஏற்பட்டதாகத் தெரியவில்லை. ஆண்டுதோறும் கடற்கரையில்