பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

129 கால்டுவெல்


உடன் பாட்டின் மூலசாசனம், அவன் கோட்டையில் அகப்பட்டது.

திருநெல்வேலி வியாபார வரலாற்றைப் ப்ற்றிய முக்கியமான சில ஆண்டுகளை நான் இங்குச் சேர்த்திருக்கிறேன். இவற்றுள் சில பிற்காலத்துச் செய்திகளாயிருப்பினும், முந்தைய தேதியிட்டுத் தரப்பட்டுள்ளன:

1. 1658 இல் டச்சுக்காரர் தூத்துக்குடியைப் போர்ச்சுகீசியரிடமிருந்து கைப்பற்றினர்.

2. 1782இல் தூத்துக்குடி ஆங்கிலேயர்களால் டச்சுக்காரரிடமிருந்து கைப்பற்றப்பட்டது.

3. 1783 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 2 ஆம் தேதி ஏற்பட்ட ஒப்பந்தத்தின்படி, 1785 இல் தூத்துக்குடியை ஆங்கிலேயரிடமிருந்து டச்சுக்காரர் மீண்டும் பெற்றனர்.

4. 1795 இல் மறுபடியும் ஆங்கிலேயர் தூத்துக்குடியைக் கைப்பற்றினர்.

5.1818 பிப்ரவரி 9 ஆம் தேதி மறுபடியும் தூத்துக்குடி டச்சுக்காரரிடம் திருப்பிக் கொடுக்கப்பட்டது.

6. இறுதியாக 1825 ஆம் ஆண்டு, ஜூன் திங்கள் முதலாந்தேதி சமாதானமான டச்சுக்காரர் ஆங்கிலேயரிடம் தூத்துக்குடியைக் கொடுத்துவிட்டனர்.

பகைவனுக்கு அருளிய ஊமைத்துரை

கடைசிப் பாளையக்காரர் சண்டையில் ஆங்கிலேயரிடமிருந்து தூத்துக்குடி பறிக்கப்பட்டுச் சிறிது காலம் பாஞ்சாலங்குறிச்சிப் பாளையக்காரர் வசம் இருந்தது. 1801 ஆம் ஆண்டு ஆரம்பத்தில் இச்சம்பவம் நடைபெற்றது. துத்துக்குடிக் கோட்டையில் ஒரு வாலிப சுபேதார் சிப்பாய் கூட்டத்துடன் இருந்து வந்தான். தீவினையால் (?! - ந.ச.) அவன் ஒரு பக்கமிருந்து எதிரிகளைத் தாக்கிக் கொண்டிருந்தபோது அவன் படையில் இருந்த உள்நாட்டான் ஒருவன் மற்றொரு பக்கத்தில் எதிரிகளை உள்ளே விட்டுவிட்டான். எதிரிகள் சிப்பாய்களின் ஆயுதங்களைப் பிடுங்கிக் கொண்டு அவர்களை விட்டு விட்டார்கள். ஆங்கிலேய அதிகாரியை மட்டும் ஏதேனும் ஓர் ஆங்கிலக் குடியேற்ற நாட்டிற்குச் செல்ல மீன்பிடிக்கும் மரக்கலத்தில் ஏறிப்போகும்படி அனுமதித்தனர் (பகைவனுக்கும் அருள்புரிந்தான் ஊமைத்துரை! - ந.ச.). தூத்துக்குடியின் தலைமை அதிகாரியாயிருந்த