பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/224

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருநெல்வேலி சரித்திரம் 216


நின்றமையால் கோட்டையைத் தாக்கிய எதிரிகள் அரை மணி நேரம் வரை போர்க்களத்திலே போரிட்டுவிட்டுப் போதுமான இழப்புகளுடன் திரும்பினர். காப்டன் பெய்ண்டரும் (Captain Painter) மற்றும் ஐந்து ஐரோப்பியர்களும் கொல்லப்பட்டனர். அநேக ஐரோப்பியர் காயமடைந்தனர். அந்தக் கோட்டைக்குச் சொந்தக்காரப் பாளையக்காரனுக்கு ஏறக்குறைய 200 பேருள்ள படைப்பலமே இருந்தது. என்றாலும் மற்ற எல்லாப் பாளையக்காரரும் அவனுக்குத் தேவையானப் படையைப் புதிதாக அனுப்பிக் கொண்டேயிருந்தனர். திரும்பும் போது மேஜர் பிளிண்ட் எதிரிகளுடன் போரிட்டுத்தான் அவர்களைக் கடந்து வர முடிந்தது. காப்டன் ஹார்ப்பர் (Captain Harper) அவனுடைய படையின் பிற்பகுதிக்குத் தலைவனாயிருந்தான்.

1767-பாளையக்காரர்களுக்கு எதிராகச் செய்யப்பட்டதோல்விப் போராட்டத்துடன் தொடங்கியது இவ்வாண்டு. மேஜர் பிளிண்ட் முதலில் ராஜபாளையத்திற்குப் பின் வாங்கிப் பிறகு சிதியாத் (Sitheath) சித்துத்துக்கு (Sittuttus) போய்ப் பின்னர் பரம்பூருக்குச் சென்று அங்கு பக்சியினுடைய படையுடன் சேர்ந்து கொண்டான். பாளையங்கோட்டையில் காப்டன் பிரிஷ்மனிடமிருந்து (Frischman) பலமான பீரங்கிப் படையைப் பெற்றுக் கொண்டு அவன் பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டையைத் தாக்கப் புறப்பட்டான். முதலில் எட்டையபுரம் நாட்டிலிருந்து மற்ற இரு கோட்டைகளைத் தாக்க எண்ணினான். ஆனால் அந்த எண்ணத்தை மாற்றிக் கொண்டு மிக முக்கியமான இடமாகிய பாஞ்சாலங்குறிச்சியைத் தாக்கினான். அவனுடைய வெற்றியை அரசாங்கத்தினர் வெகு ஆவலுடன் எதிர்பார்த்தனர். ஏனெனில் கொல்லம் கொண்டானைக் கைப்பற்றுவதில் அண்மையில் அடைந்த தோல்வியால் பெரிதும் பாளையக்காரர்கள் இறுமாந்திருந்தனர். (கால்டுவெல் வெள்ளையர் சார்பாக எழுதும் வரலாற்றாசிரியர் என்பது கருதத்தக்கது. ஆங்காங்கே நினையத்தக்கது - ந.ச.) எனினும் சிறந்த துப்பாக்கிப் பீரங்கிகளும் அவனுக்கு அளிக்கப்பட்டிருப்பதால் பாளையங்காரர்களின் கோட்டைகளைத் தாக்குவதில் வெற்றி காணுவான் என்று நம்பினர்.

பாஞ்சாலங்குறிச்சி

திருநெல்வேலிக் குறிப்புகளிலுள்ள பாஞ்சாலங்குறிச்சியின் முக்கியத்துவம் பற்றி இங்குச் சில வார்த்தைகள் கூற வேண்டியுள்ளது, இப்பெயர் ஒர்மின் சரித்திரத்திலேயேயும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. கர்னல் ஹெரான் 1735 இல் இதற்கு எதிராய்ப் படையெடுத்துச்