பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/226

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருநெல்வேலி சரித்திரம் 218


செய்யப்பட்டவர்களும் காயமடைந்தவர்களும் மொத்தத்தில் 92 பேர். அதில் 8 ஐரோப்பியர் கொலை செய்யப்பட்டனர். 18 பேர் காயமடைந்தனர். மேஜர் பிளிண்ட் தாக்குதலை முற்றுகையாக்கத் தீர்மானித்தான். ஆனால் இரவில் பிற்காலத்தில் அடிக்கடி நடந்தது போல கோட்டையைக் காத்திருந்தவர்கள் அங்கிருந்து தப்பி விட்டனர். சிலர் தூத்துக்குடியிலும் சிலர் வைப்பாரிலும் (Vypaur) அடைக்கலம் புகுந்தனர். எட்டயபுரம் கூட அச்சமயத்தில் தாக்கப்பட்டிருக்கும். ஆனால் அதையும் விட்டுவிட்டு ஓடிவிட்டனர். வைப்பாரையும் விட்டுவிட்டு எதிரிகள் மறைந்து விட்டனர்.

இத்தகைய ஒரு முற்றுகையைப் பற்றிய நினைவு மறைந்து விட்டது என்பது விபரீதமாயிருக்கிறது. பாளையங்குறிச்சியின் - அநேக முற்றுகைகளுள் கடைசி முற்றுகை மட்டும் ஒரு கவிஞரால் நிரந்தர நினைவாக்கப்பட்டுவிட்டது. ஆனால் மேஜர் பிளிண்ட் ஆரம்பித்த முதல் முற்றுகை அவ்வளவு நல்வினை செய்திருக்கவில்லை. கொராசு (Horace) கூறுவது போல 'அவர்களிடம் கவிஞன் இருந்திருக்கமாட்டான். எனவே அவர்கள் இறந்திருப்பார்கள்' (கால்டு வெல்லின் இச்சொற்கள் பாஞ்சாலங்குறிச்சியின் விடுதலை வீரத்திடம் அந்நாளைய அயல்நாட்டு அறிஞர்கட்கும் இருந்த அச்சத்தையும் மதிப்பையும் அறிவிக்கிறது அல்லவா? மேலும் கால்டுவெல் வரலாற்றை ஆராய இலக்கியத்தையும் தேடுகிறார் என்பதும் தெரிகிறது அல்லவா? - ந.ச.)

இச்செய்தியை அறிந்தவுடனேயே அரசாங்கத்தினர் பொறுப்பற்றப் பாளையக்காரர்களை அழிப்பதற்காக மதுரைக்கும் திருநெல்வேலிக்கும் போதுமான படையை அனுப்பி வைக்கத் தீர்மானித்தனர். அவர்கள் எண்ணியதற்கு மாறாகப் பாளையக்காரர்களை ஒடுக்குவது மிகக் கடினம் என்பதைக் கண்டறிந்தனர். இந்த இடையூறு, சீர்கேடான இரண்டு அரசாங்கம் ஒழியும் வரை நவாபினுடைய நாடு முழுவதும் கம்பெனி அரசாங்கத்தினிடம் மாறும் வரை தொடர்ந்து வந்தது. கலகக்கார மாவட்டங்களில் ஏற்கனவே பழக்கமுள்ள ஒரு படைத் தலைவன் இப்படைக்குத் தலைவனாய் நியமிக்கப்பட்டான். 1761 இல் யூசுப்கானையும் மதுரையையும் பிடித்த கர்னல் டொனால்டு காம்பெல்தான் அந்தப் படைத்தலைவன். அவன் 1765 இல் திருநெல்வேலியை நோக்கி ஒரு படையுடன் சென்றான்.

1767 ஆம் ஆண்டு 25 ஆம் தேதி ராஜபாளையத்தை நோக்கிச் சென்ற கர்னல் காம்ப்ஸல் ஏப்ரல் மாதம் 26 ஆம் தேதி, நான்கு மாதங்களுக்கு முன் மேஜர் பிளிண்ட் படுதோல்வியடைந்த கொல்லம் கொண்டானுக்கு எதிரில் தன் படையுடன் தோன்றினான். அவனுடைய