பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/256

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருநெல்வேலி சரித்திரம் 248

 மேட்டைக் காவல் செய்வதற்காக நிறுத்தப்பட்டிருந்தப் பாளையக்காரர்களுடைய கூட்டத்தினரைத் தேடி முறியடித்துப் பின்னர் மறுபக்கத்தில் இறங்கிக் காம்பேயைப் பக்கவாட்டில் தாக்கினோம். மலை எங்கள் வசமாகிவிட்டதை அறிந்த எதிரிகள் இரவு ஒற்றையடிப் பாதை வழியாகத் தப்பி விட்டனர். அந்த வியப்பான ஒதுக்குப்புற இடம் எங்கள் வசமானது. அந்த இடத்திலிருந்த பெரும் பீரங்கிகள், வெடிமருந்து சாமான்கள், உணவு முதலியவைகளைப் பற்றி செப்டம்பர் 3 ஆம் தேதியிட்ட என் கடிதத்தில் குறித்திருக்கிறேன். மூன்றாவது, 9வது பட்டாளங்களைக் கிடங்குகளுக்குக் காவலாக நிறுத்திவிட்டுத் திருநெல்வேலியிலுள்ள வடக்குப் பாளையக்காரருக்கு அச்சம் உண்டாக்குவதற்காக மதுரைக்கு நான்கு படைச்செலவு தூரத்திலுள்ள திருவல்லிபுத்தூரை நோக்கி விரைந்து சென்றோம்.

நாங்கள் திருச்சியை விட்டுவந்து ஒரு மாதத்திற்கு மேலாகி விட்டது. நாங்கள் கடந்து வந்த 300 மைல்களுக்கு மேற்பட்ட வழி நெடுகிலும் எங்கள் அதிகாரத்தை நிலைநாட்டி வந்தோம். சிவகிரி அரசனுடன் செய்து கொண்ட ஏற்பாடுகளைத் தவிர பாளையக்காரர்களுக்குச் சொந்தமான இரண்டு வலிமையான இடங்களுக்கு நாங்களே தலைவர்களானோம். அவர்கள் பொது வசதிகளைச் செய்து கொடுப்பார்களென்று எதிர்நோக்கி அங்குத் தங்கினோம். ஆனால் திப்பு சுல்தான் மங்களுரை முற்றுகையிட்டுக் கொண்டிருக்கிறான். எனவே நான் விரைவாகத் திண்டுக்கல் சென்று அப்படையுடன் சேர்ந்து கொள்ளவேண்டு மென்பதை அவர்கள் அறிவார்கள். எனவே காலங்கடத்துவதில் உள்ள அவர்களது உற்சாகம் தீவிரமாயிற்று. ஆகவே பாசறையில் என்னுடன் ஒப்பந்தம் பேச அனுப்பப்பட்ட முக்கிய பாளையக்காரர்களின் வக்கீல்களைக் (வக்கீல்கள் - தூதர்கள், ஏஜெண்டுகள் அல்லது பிரதிநிதிகள்) கூட்டி நான் செப்டம்பர் 21 ஆம் தேதி அந்த மாகாணத்தை விட்டுப் புறப்படுவதாக அவரவர்களுடைய தலைவர்களுக்குத் தெரிவிக்குமாறு கூறினேன். அவர்கள் ஒப்பந்தத்திற்கு ஒத்துவராவிட்டால் திரும்பிச் சென்று ஒழுங்கீனம் செய்கின்ற பாளையக்காரர்கள் மீது படையெடுத்து வந்து அவர்கள் வசமிருக்கும் எல்லா உடைமைகளையும் நாசமாக்குவேன் என்று அழிக்கும் தொழிலுக்கு அதிபதியான கடவுளாகிய சிவன் பேரில் ஆணையிடுவேன் என்றும் சொல்லியனுப்பினேன். இந்த அறிவிப்பு மொத்தப் பேரவையினருக்கும் கிலியூட்டியது. பாளையக்காரர்களுடன் உடன்படிக்கை செய்து முடிப்பதற்குமுன் அந்த மாகாணத்தை விட்டுப் புறப்பட்டு வந்ததற்காக வருத்தம் தெரிவித்துத் திரு.இர்வினுக்கு ஒரு கடிதம் எழுதினேன். கட்டபொம்ம நாயக்கன் சிவகிரி பாளையக்காரர்களுக்குக் கோட்டையைத் திரும்பிக் கொடுக்க வேண்டுமாயின் அதற்குத்