பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/258

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருநெல்வேலி சரித்திரம் 250


பட்ட அரசாங்கப் பொது அறிவிப்பில் கர்னல் புல்லர்ட்டனின் படையெடுப்பால் ஏற்பட்ட இராணுவ நன்மைகளும் அவர் செய்த நீதி ஒழுங்கு முறைகளும் நிறைவாக இருந்தது என்று காணப்பட்டது.

கட்டபொம்ம நாயக்கன் டச்சுக்காரர்களுடன் செய்து கொண்ட கடிதப் போக்குவரத்துகளின் மூலங்களையும், மொழிபெயர்ப்புகளையும் திரு. இர்வின் அனுப்பிவைத்தார். மேலும் அவர் டச்சுக்காரர்களுடன் செய்து கொண்ட உடன்படிக்கையும் கிடைத்தது. இவைகள் அவன் கோட்டையைக் கைப்பற்றிய போது கிடைத்ததாகக் கர்னல் புல்லர்ட்டன் கூறியிருக்கிறார். இச்செயல்களை நோக்குமிடத்து கட்டபொம்ம நாயக்கனைக் கொடுமைப்படுத்தியது நியாயமானது என்றே அவர் கூறுகிறார். மேலும் அவர்கள் எதிர்பார்த்தபடி தற்போது அமைதி நிலை நாட்டப்பட்ட போதிலும் டச்சுக்காரர்கள் தூத்துக்குடிக்குத் திரும்பி வந்தால் முன்போல் கட்டபொம்ம நாயக்கனுக்கு உதவியும் ஊக்கமும் அளிக்காதவாறு தடுப்பதற்கான வழிகளைச் செய்தல் வேண்டும் என்றும் பரிவுரை செய்துள்ளனர்.

1784இல் முதன் முதலாகத் திரு இர்வின் மேற்பார்வையில் கிழக்கிந்தியக் கம்பெனி முத்துக்குளியலை நடத்தியது. ஆனால், என்றும் நிகழ்வதைப் போல, அம்முறையும் அது மனநிறைவளிக்கவில்லை.

மே மாதத்தில் கமிட்டிக்கு எழுதிய ஒரு கடிதத்தில் கர்னல் புல்லர்ட்டன் பாளையக்காரர்களுடன் நடத்திய விவகாரங்களில் கொடுமையும் இரக்கமும் கலந்து காட்டியதால் ஏற்பட்ட அதிகமான நன்மைகளைப் பற்றி இர்வின் குறிப்பிட்டிருந்தார். இந்தக் கொள்ளையைக் கடைப்பிடிப்பதற்காகவே பாளையக்காரக் கைதிகளை விடுதலை செய்வதாக அவரே கூறுகிறார். இந்த எதிர்பாராத இரக்கமுள்ள செய்கையால் அவர்களுக்குக் கம்பெனியாரிடமுள்ள நம்பிக்கையை மேலும் வலுப்படுத்தலாமென நம்பினார். கொல்லார்ப்பட்டி பாளையக்காரன் 20 ஆண்டுகட்கு மேல் சிறைவைக்கப்பட்டிருந்தான். அவன் சிறை செல்லும்போது குழந்தையாக இருந்த அவன் மகன் பாளையத்திற்குத் தலைவனாகி, இது வரை இவ்வுடமைகளின் உரிமையை அனுபவித்து வந்தான். ஆயினும் அவன் தன் தந்தையின் விடுதலைக்காக மனுச் செய்து கொண்டதுமன்றி, திரு. இர்வின் முன்னிலையில் அவன் அதுவரை அனுபவித்து வந்த அதிகாரங்களைத் தன் தந்தைக்கு மாற்றிவிட்டுத் தானாகவே விலகிக் கொண்டான். இந்த உருக்கமான கடமை உணர்வைக் கண்டு திரு.இர்வின் மிக வியப்படைந்தார். இந்திய வாசகர்களுக்கு அது முன்னவனாகிய இராமனிடம் பரதன் காட்டும் அன்பை நினைவூட்டும். (கால்டுவெல் பாதிரியார் காட்டும் இந்த உவமையின் நலம் உள்ளி உவக்கத்