பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/260

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருநெல்வேலி சரித்திரம் 252


மீட்கவேண்டும். அது மிக இழிவான முடிவுகளுடன் சுமத்தப்பட்ட பிற் போக்குள்ள ஒரு அளவீடாக இருக்கிறது என்று திரு.இர்வின், அரசாங்கத்தினருக்கு எழுதிய ஒரு கடிதத்தில் ஜூன் 24 ஆம் தேதி எழுதினார். வரிவசூல் ஒப்படைப்பு தவிர்க்க முடியாத ஒன்றாக இருந்தால், திருநெல்வேலி, மதுரை நீங்கலாக மற்றெல்லா இடங்களிலும் அக்டோபர் வரை கட்டுப்பாடு கோரிக்கை ஏற்படுத்தப்படவேண்டுமென்று அவர் வேண்டிக் கொண்டார். அதற்கு இரு மாவட்டங்களும் அவராலேயே புதிய முறையில் மாற்றியமைக்கப்பட்டிருந்தமையால் புதிய நிலையிலிருப்பதாகத் தெரிவித்தார். சீர்திருத்தங்களும், அமைதியான முறைகளும் புகுத்தப்பட்டன. ஆனால் போதிய காலமில்லாமையால் அவைகளை நடைமுறையில் சிறப்பாகச் செய்ய இயலவில்லை. அவனுடைய விருப்பம் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. ஏனெனில் அவன் கடிதம் மதராசுக்குப் போய்ச் சேர்வதற்குள் வரியுரிமை மாற்றம் பொதுவாக நடைபெற்று முடிந்து விட்டது. இந்த முடிவின் படி ஜூலை 10 ஆம் தேதியிலிலேயே ஜூன் 28 ஆம் தேதியிலிருந்து சேர வேண்டிய பாக்கியுடன் மாவட்டத்தை அமில்தாரிடம் ஒப்படைத்து விட்டதாக இர்வின் அறிவிக்கிறார். அவர் அவ்வாறு செய்தபோது, இச்செயலால் அடுத்துவரக்கூடிய தீமைகளை எண்ணி அஞ்சுவதாக மறுபடியும் தெரிவித்தார். செப்டம்பரில் திருநெல்வேலியிருந்து மதராசுக்குச்செல்லும் வழியில் மதுரையிலுள்ள வேலூரிலிருந்து அரசாங்கத்தினருக்கு ஒரு கடிதம் எழுதினார். அதில் மதுரை மாவட்டத்தில் அவருடைய வரிவசூல் உதவியாளராக இருந்த திரு. டோரி நடத்தையைப் பற்றி மிகச்சிறப்பாக எழுதியிருந்தார். அவரே பின்னர் 1790 இல் ஏற்பட்ட கொள்கையின்படியும், 1792இல் நடந்த உடன்படிக்கையின் படியும் திருநெல்வேலியின் முதல் கலெக்டராக இருந்தார். மதராசுக்கு அவர் வந்தபின் அக்டோபரில் அரசாங்கத்தினருக்கு ஒரு வன்மையான கடிதம் எழுதினார். அதில் அவர் அதிகாரத்திற்கு உட்பட்டிருந்த திருச்சிராப்பள்ளி முதல் திருநெல்வேலி வரை உள்ள தென் மாவட்டங்கள் நிலையைப் பற்றி அவருடைய எண்ணங்களை உறுதியாக வெளியிட்டிருந்தார். கம்பெனியார் ஆட்சியினின்றும் விலகுவதன் மூலம் நவாபின் பிரதிநிதிகள் விதிவிலக்கின்றி ஒழுங்கற்ற ஆட்சிபுரிவார்கள்; பாளையக்காரர்கள் கலகமும், கொள்ளைகளும் அடக்குமுறையற்றுப் போகும். இவ்விரண்டு காரணங்களால் பழைய தீமைகள் அனைத்தும் மீண்டும் வலிவடைந்துவிடும் என்பதே திரும்பத் திரும்ப உறுதியாகக் கூறப்பட்ட அவரது தீர்ந்த எண்ணங்கள்.

வரியுரிமை மாற்றக் குழு தங்கள் வேலைகளை விட்டு விலகிய போது, டிசம்பர் 31 ஆம் தேதி அரசாங்கத்தினருக்குத் தங்கள் நடவடிக்கைகளைப் பற்றிப் பொது விவரத்தை ஒப்படைத்தது. அதில் திருநெல்-