பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/263

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

255 கால்டுவெல்


(iktibarkhan) நிர்வாகத்தில் அடுத்தடுத்து மூன்று ஆண்டுகளில் ஏற்பட்ட நெருக்கடிகளை உருக்கமான நெஞ்சத்தோடு ஒப்பிட்டுப் பார்த்தனர். இத்தகைய பொறுக்க இயலாத கொடுமைகளிலிருந்து விடுபடமக்கள் திருவாங்கூர் நோக்கி ஓடினர். எனவே நாட்டின் அழிவு விரைவாக நெருங்கியது. நாளடைவில் நவாபின் அச்சங்கள் மேன்மைதங்கிய பிரபு ஹோபார்ட் (Lord Hobart)டின் எதிர்வாதத்தால் நாட்டில் நாசத்தை விளைவித்தது. இந்த முறையால் வளர்த்த தீமைகளின் நுணுக்கம், அவற்றை ஒழித்து அடுத்தபடியாக முற்றுப் புள்ளி வைக்க வேண்டுமென்று உடனடியாகக் கம்பெனி அரசாங்கம் மேற்கொண்ட திட்டங்கள், முக்கியமாக இந்தக் கால எல்லையில் நிறுவப்பட்ட வாணிப முதலீடு பற்றிய கண்டிப்பான உண்மை ஆகியவை திருநெல்வேலியின் அழிவை அகற்றியது என்று கூறுதல் வேண்டும். ஏனெனில் மேன்மை தங்கிய தர்பாரில் எழுப்பிய எச்சரிக்கையும், இந்தக் கொடுமைகளிலெல்லாம் பங்கு கொண்டவர் நெஞ்சங்களிலெல்லாம் எழுப்பப்பட்ட விழிப்பு எச்சரிக்கையும் முக்கியமாக மேன்மை தங்கிய நவாபின் நிர்வாகத்தின் தன்மையை மாற்றியமைத்தது. அநியாய வட்டிக்கு அடமானம் வைக்கும் முறை அந்தக் காலத்திலிருந்து ஒழிந்தது. ஏனெனில் மாகாணமெங்கும் முன்பு பரவியிருந்த அத்தகைய கெடுதலான நடைமுறைகளினால் ஏற்பட்டிருந்த பயன்கள் ஒருசில துணிவுள்ளவர்கள், அரைகுறையான அச்சம் தரும் கொடிய தானிய சர்வாதிகாரத்தினால் பெற்ற குறைந்த நன்மைகளிலிருந்து மாறுபட்ட தன்மையுடையதாயிருந்தன. பொதுவாகக்'கான்' என்றழைக்கப்பட்ட இக்கடிபார்கான் இந்தக் கட்டத்தின் பெரும்பகுதியான காலத்தில் நவாபின் நிர்வாகியாகத் திருநெல்வேலியில் இருந்தான்.

1786-1786-ம் ஆண்டு மே முதல் தேதி வருவாய்த்துறை (Revenue Board) சென்னையில் அமைக்கப்பட்டது.

பாளையங்கோட்டை படைத்தலைவன், நவாபின்நிர்வாகியாகிய இக்கடிபார்கானின் வேண்டுகோளுக்கிணங்க சங்கர நயினார்கோவிலில் ஐந்து படைகளடங்கிய காப்டன் பிளாக்கரின் (Captain Blacker) பட்டாளத்தை நிறுத்தி வைத்தான்.

1787-திரு. ஒக்ஸ் (Mr. Oakes) பாளையங்கோட்டை ஊதியம் வழங்கும் பணியை மறுபடியும் ஏற்றுக் கொண்டார். படைப்பகுதித் தலைவனான மேஜர் மெலியட்டும் (Major Maleod) ஊதியம் வழங்கும் பணியாளருக்கும், ஊதியம் வழங்கும் பணியாளர் நியமித்த பரிவர்த்தன விகிதத்தினால் (Rate of Change) தன் துருப்புகளுக்கு ஏற்பட்ட இழப்பைப் பற்றிய தகராறு ஏற்பட்டது.