பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/272

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருநெல்வேலி சரித்திரம் 264


அவருடைய உதவியாளர் திரு. பால்மெயின் தற்காலிகப் பொறுப் பேற்றார். திரு. லாண்டனுக்குப் பின் திரு. ஜியார்ஜ் பவுனே (George Powney) பொறுப்பேற்றார். அவர் 1788லிருந்து திருவனந்தபுரத்தில் ரெசிடெண்டாக (Resident) இருந்தார். அவர்தான் அங்கிருந்த முதல் ரெசிடெண்ட். இந்தச் சமயத்தில் டோரின் செய்தியைப் போலவே, பாளையக்காரர் பேஷ்குஷ் கலெக்டர் திருச்சிராப்பள்ளி முதல் திருநெல்வேலி வரை மணப்பாறைப் பாளையக்காரர்கள், இராமநாதபுரம் ராஜா, சிவகங்கைப் பாளையக்காரர்கள் உட்பட எல்லாப் பாளையக்காரர்களின் மேலும் அதிகாரமுடையவனாக இருந்தான்.

திசைக்காவல் குறித்துத் திருநெல்வேலி பாளையக்காரர்களின் உரிமையைப் பற்றித் திரு. லாண்டன் தொடங்கிய விசாரணையைத் தொடர்ந்து நடத்தும்படி அரசாங்கம் திரு பவுனுக்குக் கட்டளையிட்டது.

179: திருவில்லிப்புத்தூர் படைத்தலைவன் சிவகிரிப் பாளையக்காரர்களைச் சார்ந்தவர்கள் செய்த கொள்ளைகளைப் பற்றி முறையிட்டிருந்தான். கர்னல் மாக்ஸ்வெல்லின் திட்டப்படியும் கலெக்டரின் பரிந்துரையின்படியும் துருப்புகளின் படைப்பகுதிகள் பாளையக்காரர்களை அச்சுறுத்தத்தக்கபடி பல இடங்களில் நிறுத்தப்படவில்லை என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொண்டார் திரு. பவுனே. அவர் பாளையக்காரர் மாவட்டங்களைப் பற்றிய அரசாங்க ஆணை ஒன்று பெற்று அதை வெளியிட்டார். அதில் கம்பெனி அரசின் வழியாக அனுப்பப் பட்ட கட்டளைத் தவிர நவாபின் எந்தக் கட்டளைகளுக்கும் பாளையக்காரன் கீழ்ப்படியக்கூடாதென்று அறிவிக்கப்பட்டது. டச்சுக்காரர்களிடமிருந்து இந்த ஆண்டு தூத்துக்குடி கைப்பற்றப்பட்டது.

கூட்டு இயக்குனர்கள் பாளையக்காரர்களைப் படைக்கலனற்றவர்களாக்கவும், அடங்காதவர்களை அடக்கவும், அவர்களுடைய விவாதத்திற்குட்பட்ட உரிமைகளைச் சரிப்படுத்தவும், தற்போது அநீதிகளிலும் வறுமையிலும் அவதிப்படும் மாகாணங்களில் பணிவையும் செழுமையையும் உண்டாக்கத் தக்க எவ்விதமான உள்நாட்டு அமைப்புகளடங்கிய முறையைப் புகுத்தவும் உடனேயே தீவிர கட்டளைகள் அனுப்பப்பட்டன. கூட்டு இயக்குனர்களிடமிருந்து அதே ஆண்டில் அதே செய்தியைக் குறித்து வந்த கடிதத்தின் மேற்கோள்கள் 1781-1801 ஆண்டுகட்கு இடைப்பட்ட அரசியல் நிலையைக் குறிக்கும் பகுதியில் உளளது.

வரிவசூல் போர்டு திருநெல்வேலி மாவட்ட ஆட்சியாளரைக் கூட்டு இயக்குனர்களின் இக்கட்டளைகளைக் கடைப்பிடிக்கத்தக்க