பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/273

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

265 கால்டுவெல்


சிறந்த வழிகளைப் பற்றி அறிவிக்கும்படி கேட்டது. இரட்டை அரசாங்க நிர்வாகம் நீடித்தவரை பரிந்துரைகளோ, அறிவுறுத்தல்களோ, தீவிர கட்டளைகளோ எதுவும் சிறிதளவு முன்னேற்றத்தைக் கூட உண்டாக்க முடியாது என்பதைத் திரும்பத் திரும்ப இங்குக் கூறத் தேவையில்லை. அது எண்ணெயையும் தண்ணீரையும் கலக்கக் கட்டளையிடுவதற்கு ஒப்பாகும்.

1796: சொக்கப்பட்டி கோட்டையைக் கம்பெனி வசம் வலுவில் அடைக்கலம் புகச் செய்யத் தக்க நடவடிக்கைகளைத் திரு. பானே மேற்கொண்டார்.

1797: திருநெல்வேலி பாளையக்காரர்களின் அடங்காத்தன்மை, மரியாதையற்ற போக்கு, கொள்ளையடிக்கின்ற வழக்கம் முதலியவைகளைப் பற்றி நவாபு முறையிட்டிருந்தான். இந்த முறையீடுகளைக் கண்டிப்பாக விசாரிக்கும்படி கலெக்டருக்கு அரசு கட்டளையிட்டது.

சிங்கப்பட்டிப் பாளையக்காரன் வேட்டையாடும் பொழுது ஊர்க்காடு பாளையக்காரன் அவனால் சுடப்பட்டான். ஆனால் சிங்கப்பட்டிப் பாளையக்காரன் குடிகாரன்; கொடுமையான குணமுள்ளவன். எனவே அவனைக் கொலைக்குற்ற விசாரணை செய்யத்தக்க வலிமைபெற்றவர்கள் பாளையத்தில் யாருமில்லை என்றும் குறைப்பட்டுக் கொண்டதோடு, குற்றவாளியை விசாரிப்பது இயலாத செயலாகத் தோன்றுகிறதென்றும் திரு. பவுனே வரிவசூல் கழகத்துக்கு அறிவித்தார். (கொடுமையின் வலிமை! - ந.ச.)

மற்றொரு பத்தியில் சிவகிரி பாளையக்காரன் மகன் மாப்பிள்ளை வன்னியன், சங்கரலிங்கம்பிள்ளை இருவராலும் தூண்டப்பட்டு அவன் தந்தையின் ஆட்சிக்கு எதிராகச் சூழ்ச்சி செய்து அவனுடைய வசத்திலிருந்த பாளையங்களின் ஆட்சியைப் பறிக்க முயற்சித்தான் என்று அவர் கூறுகின்றார். பிறகு கலகக்கார மகன் கலகக்கார பாஞ்சாலங்குறிச்சி பாளையக்காரனுடன் தொடர்பு கொண்டிருந்தான் என்பது தெரிய வந்தது. பவுனே அந்த மாவட்டத்தை விட்டுப் புறப்படுவதற்கு முன்னே சிவகிரி பாளையக்காரனின் மகனால் திரட்டப்பட்ட கலகக்காரர்கள் சிதறடிக்கப்பட்டனரென்றும், ஆனால், மகன் மட்டும் மலைகளில் தப்பி ஒடி மறைந்துவிட்டதாக அறிவித்தார். ஆயினும் சங்கரலிங்கம் பிள்ளை பிடிக்கப்பட்டு அக்காலத்திய அந்தமானாகக் கருதப்பட்ட சுமத்திரா விலுள்ள பென் கூலெனக்கு கப்பலேற்றப் படுவதற்காக சென்னைக்கு (மாகாணத்திற்கு) அனுப்பப்பட்டார்.

1797 இல் வரிவசூல் கழகம் சென்னை ஆளுநருக்கு எழுதிய கடி