பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/290

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருநெல்வேலி சரித்திரம் 282


கொண்டீர்கள். இக்குழு கலெக்டரின் ஆவணங்களைத் தடையின்றி கவனிப்பதற்கான வாய்ப்புகள் அளிக்கப்பட வேண்டும் என்றும், தங்கள் காரியத்தைச் செயல்படுத்தத் தக்க காவல் தேவைப்படலாமென்றும் அதற்காக வரி வருமானத் துறையிலுள்ள எல்லோருடைய உதவியும் குழுவிலுள்ளவர்களுக்குத் தேவைப்பட்டால் உடனுக்குடன் அவர்கள் அவற்றைக் கவனிக்குமாறு உத்தரவிடப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தீர்கள். அதே சமயத்தில் அவ்விருவரும் படையெடுப்பில் முதன்மை வகித்தாலும் குழுவில் முதன்மையாயிருப்பதால் மேஜர் ஜெனரல் பிளாயிடு பாளையக்காரனுடன் தொடங்க விரும்பிய உடன்படிக்கையை மேலும் இயல்பாகக் கர்னல் பிரெளன் செய்வாரென்று எண்ணியமையால் அந்த அதிகாரிக்கு அக்கடமையை மாற்றும்படி ஜெனரல் பிளாயிடுக்கும் அதிகாரம் வழங்கப்பட்டது. இத்தீர்மானங்கள் அடங்கிய அறிக்கையின் நகல் ஒன்று ஜாக்சனுக்கு அனுப்பப்பட்டது. பாஞ்சாலங்குறிச்சி பாளையக்காரனிடம் கலெக்டருக்குள்ள அதிகாரம் நீக்கிவைக்கப்பட்டது பற்றி நடைபெற்ற கடிதப் போக்குவரத்து மார்ச் 2 ஆம் தேதிக்கடியில் ஒரத்தில் குறிக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் தீர் மானங்களுடன் இக்குழுவின் நடவடிக்கைகளும் இந்தத் துறைக்கு அனுப் பப்பட்டது. நாங்கள் பெற்ற உத்தரவுகளுக்கேற்ப செய்தி அறிவதற்காகவும் வழிகாட்டவும் பாளையக்காரனிடம் நன்றாக விளக்கப்பட வேண்டிய குறிப்பான வழிகளைத் தெரிவிக்கும் கட்டளைகளுடன் தற்போதைய கலெக்டருக்கு அவை அனுப்பப்பட்டுள்ளன.

அரசு தீர்மானங்களில் கூறியிருப்பதாவது:- கட்டபொம்ம நாயக்கனின் கீழ்ப்படியாத் தன்மைக்கு எதிராகக் கொடுக்கப்பட்ட கலெக்டரின் விவரங்கள், குற்றச்சாட்டுகள் இவற்றின் காரணமாய்த் தோன்றக் கூடிய எல்லாச் சூழ்நிலைகளையும் ஏற்றுக் கவனித்ததில் கட்டபொம்ம நாயக்கன் இராமநாதபுரத்திற்கு வரவேண்டுமெனக் கட்டளையிடும்படி வரிவருமானத்துறை அவனுக்கு ஆணையிட்டது. அந்தக் கட்டளை பாளையக்காரனுக்கு அறிவிக்கப்பட்டவுடன், நாயக்கன் இராமநாதபுரத்திற்குப் புறப்படுவதில் தேவையற்ற காலத்தாழ்ப்பு செய்யவில்லை. ஆனால் அதற்கு மாறாகக் கலெக்டரைத் தானே நேராகச் சந்திப்பதின் மூலம் (உ.ம்...-ந.ச.) அரசு நிர்வாகிகளிடம் தான் கீழ்ப்படிந்து போகத் (?-ந.ச.) தயாராயிருப்பதை மெய்ப்பிக்க அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்வதில் அவன் உண்மை ஆர்வம் காட்டினான். ஆனால் அச்சமயத்தில் ஜாக்சன் அவனிடம் நடந்து கொண்ட முறை தேவையற்ற கடுமையும் கொடுமையும் நிறைந்ததாயிருந்தது. (அந்தோ! -ந.ச.) அன்றியும், 23 நாட்கள் பாளையக்காரன் தன்னைப் பின்தொடர்ந்து வரும்படி அவன் கட்டாயப்படுத்தப்பட்டிருப்பதனால்