பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/293

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

285 கால்டுவெல்


பட்டது. என்றாலும் அக்குற்றத்தினின்றும் விடுதலை பெற்றான்.

1799 ஜனவரி 12 ஆம் தேதி ஜாக்சனுக்குப்பின் லூஷிங்டன் பதவிக்கு வந்தான். மார்ச் 16ஆம் தேதி கட்டபொம்ம நாயக்கனுக்கு மிகப் பணிவு நிறைந்த கடிதம் ஒன்றை (உம்! பாயும் புலி! ந.ச.) லூஷிங்டன் எழுதினான். அதில் தளபதி கிளார்க்கு கொலைக் குற்றத்திலிருந்து பெருந்தன்மையுடன் அவன் விடுதலை செய்யப்பட்டிருப்பதாகவும், பாளையத்தின் குழு அதிகாரத்தையும் மீண்டும் கொடுத்திருப்பதாகவும் தெரிவித்திருந்தான். அதே சமயத்தில், கிஸ்தி பாக்கியுடன் தன்னை வந்து இராமநாதபுரத்தில் சந்திக்கவேண்டுமென்ற தன் விருப்பத்தையும் குறிப்பிட்டிருந்தான். இதற்குக் கட்டபொம்மநாயக்கன் எழுதிய பதிலில் எதிர் நோக்கியது போல நன்றிப் பெருக்கும் கடமைமிக்க அடக்கமும் மிகுதியாக இருந்தது. (உம்! சரிதானே! - ந.ச.) ஆனால் அரசாங்கத்தினிடமிருந்து தனக்குச் சேர வேண்டியவற்றையெல்லாம் பெற்றுக் கொள்ளும் வரை, கிஸ்தியைச் செலுத்த அவனுடைய இயலாமைக்கும், இராமநாதபுரத்திற்குச் சென்று லூஷிங்டனைக் காண இயலாமைக்கும் தக்க காரணங்கள் இக்கடிதத்தில் காட்டப்பட்டு இருந்தன. சுருக்கமாகச் சொன்னால் அவன் போக்கு மாறியிருந்ததே தவிர, அவனுடைய நடவடிக்கைகள் அன்றுபோலவே அமைந்திருந்தது. (மிக நன்று! - ந.ச.)

கட்டபொம்மன் தன்னுடைய அதிகாரங்களுக்கு அடங்கி இருக்கவும், ஆயுதங்தாங்கிய வீரர் துணையின்றித் (?! - ந.ச) தன்னை நேரில் பார்க்கத் தூண்டவும் கிஸ்தி பாக்கியை நேரில் செலுத்தும்படிச் செய்யவும் லூஷிங்டன் எடுத்துக் கொண்ட எல்லாமுயற்சிகளும் பயனற்றவையாயின. ஆகவே, நாளைைடவில் இச்செய்தியை அரசாங்கத்திற்குத் தெரிவித்தான் லூஷிங்டன். கீழ்க்காணும் குறிப்பு அவனுடைய கடிதத்தில் உள்ள முக்கிய பத்தியாகும்:

இக்கடிதத்தில் குறிப்பிடப்படும் பாளையக்காரனின் கடையாய (?! - ந.ச) நடவடிக்கைகளைப் பார்க்குமிடத்து மிக்க கொடுமையான குற்றவாளிகளைத் தண்டிக்க உடனடியாக எந்த நடவடிக்கைகளும் எடுக்கப் பரிந்துரை செய்ய வேண்டாமென நான் எண்ணுகிறேன். இந்த நாடுகளில் அனுபவமுடைய ஒரு தலைவன் (லஞ்சத்தால்) கையுறையால் ஈர்க்கப்படாத உறுதியுடைய ஒரு தலைவன் (ஐயோ! அப்போதே ந.ச.) கீழ் பயிற்சி பெற்ற படை ஒன்று தயாரிக்கப்படும் வரை பாளையக்காரனின் வருங்கால அரசியல் முறையில் சில பொது முறைகள் தீர்மானிக்கப்படும் வரை அவர்களைப் படை பலத்தால் வலுவில் சென்று அடக்க முயற்சி செய்யக் கூடாதென்பது என் எண்ணம். (உம்! - ந.ச.) ஒரு சிறுபடை கைகலப்பும் இடையூரான எதிர்ப்புகளை