பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/294

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருநெல்வேலி சரித்திரம் 286

 உண்டாக்கி நம்மைத் துன்பத்திற்காளாக்கும். (உம். - ந.ச.) பெரும் படையாயிருப்பின் அப்படைக்குச் செய்யப்படும் செலவு இரண்டு அல்லது அதற்கு அதிகமானப் பாளையங்களைப் பிரிப்பதற்குச் செய்யப்படும் செலவைவிட அதிகமானதால் அத்தகைய தியாகம் செய்வதும் தகுதியற்றது. காட்டுத்தனமாக அவர்கள் பலத்தை பெருமளவு குறைக்கும் முயற்சியை அவ்வளவு விரைவில் மேற்கொள்ள இயலாது. அப்படி அவர்கள் வலிமை குறைக்கப்படும் வரை இந்த நாட்டு மக்களின் உயிர் உடைமைகள் பாதுகாப்பாயிராது. பாளையக்காரர்களின் இறுமாப்பு, கீழ்ப்படியாமைப் பண்புகளும் மாறாது. (இந்த எண்ணத்தில் 1973 மே 21 ஆம் தேதி மண் அறைந்தது! ந.ச.)

அரசாங்கத்திற்கு இச்செய்தி கிடைத்ததும் அதிலிருந்து மற்ற பாளையக்காரர்களிடம் எதிர்ப்பு மனப்பான்மை வளர்ந்து வருவது விளங்கியமையால், ஒரு கலெக்டருக்குப் பணிய மறுத்த பாஞ்சாலங்குறிச்சி பாளையக்காரனின் செய்கை அதுவும் ஒரு வெள்ளை அதிகாரியைத் தன் கையாலேயே கொலை செய்து விட்டு அக்குற்றத்தினின்றும் விடுதலை பெற்றுவிட்டான் என்று பொதுவாக நம்பப்படும் செய்தி தொற்றிப் பரவும் தீங்காக மாறிவிடுவது உறுதி என்று அறிந்து இனி காலங் கடத்தல் கூடாதென அரசு தீர்மானித்தது.

கட்டபொம்ம நாயக்கனுடன் சேர்ந்து கொண்டு படையுதவி அளித்து அரசாங்கத்தை எதிர்த்த முக்கிய பாளையக்காரர்கள் நாகலாபுரம் கோல்வார்பட்டி (கொல்லப்படி, கொல்லர்பட்டி) ஏழாயிரம் பண்ணை பாளையக்காரர்களாவர். காடல்குடி, குளத்துர் பாளையக்காரர்களும் அவன் பக்கமே இருந்தனர். மேலும் ஓர்ம்மினுடைய நெல்கட்டும் செவ்வல் கோட்டையையுடைய ஆவுடையாபுரம் பாளையக்காரர், அக்காலத்தில் புகழ் பெற்றிருந்த புலித்தேவர் இவர்களும் அவனுடன் சேர்ந்து கொண்டனர். எல்லாம் முடிவதற்குள், ஆவுடையாபுரம் பாளையக்காரன் அரசாங்கத்துடன் சேர்ந்து கொண்டான். மேற்கு பாளையக்காரருள் முக்கியமான எதிர்ப்பு சிவகிரியிலிருந்து ஏற்பட்டது. பழைய பாளையக்காரர் அரசப் பற்றாளர். ஆனால் அவனுடைய பிள்ளை கட்டபொம்ம நாய்க்கனால் அனுப்பப்பட்ட படை உதவி கொண்டு தகப்பனை அப்புறப்படுத்த முயற்சித்தான். (விடுதலை இயக்கத்தில் இத்தகைய இளமை வீரம் இயற்கை! - ந.ச.) அவனுக்கு மற்ற பாதிக்கப்படாத பாளையக்காரர்களிடமிருந்து சிறிதளவு ஆதரவு கிடைத்தது. ஆனால் அவன் பின்னர் அரசாங்கத்தின் சார்பில் மேஜர் பானர்மனால் மன்னிக்கப்பட்டான். தந்தைக்குப் பின் அவன் பாளைய உரிமை பெற அனுமதிக்கப்பட்டான். சிவகிரியிலுள்ள முக்கிய கலகத்தலைவன் பழைய பாளையக்காரனின்