பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/299

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

291 கால்டுவெல்


கோட்டையைக் கைப்பற்ற முற்பட்டான். பாளையக்காரன் இரவோடிரவாக நாட்டை விட்டுத் தப்பி, சிவகிரிக்குப் போய்விடலாமென்ற அச்சமே ஐரோப்பியப் படைப்பகுதி வருகைக்காகக் காத்திராததற்கு பானர்மன் தரும் காரணமாகும். இது ஆதாரமற்றது. 1783 இல் கர்னல் புல்லர்ட்டன் இந்தப் பாளையக்காரனுடைய தந்தையின் கோட்டையைத் திடீரெனத் தாக்கிக் கைப்பற்றிய போதும் இவ்வாறே நடந்தது. படையெடுப்பு வெற்றி பெறவில்லை. மேஜர் பானர்மனுடைய சொற்களில் அக்குறிப்பை நான் கீழே தருகிறேன்.

அரசாங்கச் செயலருக்கு:

நேற்று தேதியிட்ட கடிதத்தில் குறிப்பிட்டதுபோல் நான் பாளையங்கோட்டையிலிருந்து புறப்பட்டு இன்று காலை பாஞ்சாலங்குறிச்சி வந்து சேர்ந்தேன். இங்குக் கோயில்பட்டி, கயத்தாறு முதலிய இடங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படைகள் என்னுடன் வந்து சேர்ந்து கொண்டன. ஐரோப்பியர் படையும், இரண்டு 12 பவுண்டு பீரங்கிப்படைகளும் போதுமான அளவு முன்னேறாததால் கயத்தாற்றிற்குச் செல்லக் கட்டளையிடப்பட்டது. படைகளின் திடீர் வருகை அங்கு எதிர்பார்க்கப்படவில்லை. ஒரு நிமிடம் கூடத் தாமதம் செய்யாது மிக்க ஆய்வோடு டல்லஸ் குதிரைப் படையுடன் கோட்டையைச் சூழ்ந்து கொண்டான். அவனைச் சார்ந்த மற்றவர்களும் தங்களாலியன்றவரை காலாட்படையுடன் உதவினர். இதற்குள் போதுமான எண்ணிக்கையுள்ள பாளையக்காரர்களின் பணியாட்களாகிய படை ஒன்று கோட்டையைச்சுற்றியிருந்த படைக்குள் நுழைய முயன்றது. ஆனால் லெப்டினன்ட் டல்லசால் அப்படை எதிர்க்கப்பட்டு இழப்போடு திரும்பி ஓடியது. பாளையக்காரனை நன்றாக எண்ணச் சொல்லி, வாய்ப்புப் போல் அவன் கம்பெனியிடம் அடைக்கலம் புக ஆணையிட்டேன். நான் எழுத்து மூலமாகக் கவுல் (நில உடன்படிக்கை Cowl) அளிப்பதாயிருந்தால் அவன் என்னிடம் வருவதாகவும், இன்றேல் வரமுடியாது எனவும் தெரிவித்தான். அவனைப் பணியவைக்க எல்லா முயற்சிகளையும் சலிப்பின்றிச் செய்தேன். எனினும் 9.30 மணிக்கு அவன் சிந்தித்துத் தான் செயல்பட வேண்டிய வழியைத் தீர்மானிக்க மேலும் அரைமணி நேரம் கால வாய்புக் கொடுத்தேன்.

கருத்துடனும், வெளிப்படையாகவும் கோட்டையைச் சுற்றிப் படையுதவியுடன் பகைவரின் மறைவிடத்தைத் தேடிச் சென்ற போது, தெற்கு வாசற்படியும் அதற்கு இடதுபக்கமும் முற்றுகையிட்டு எளிதில் அதை உறுதியாகக் கைப்பற்றத்தக்கநிலையிலுள்ளது என்றும் ஆனால் அம்முயற்சியில் நமக்குச் சிறிது இழப்பும் ஏற்படுமென்றும் எனக்குத் தோன்றியது. ஆனால் இந்த எண்ணத்துடன் அச்செயலில் நான் இறங்க