பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/339

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

331 கால்டுவெல்


வரையே உள்ளே நுழையவிடும் அவ்வளவு சிறிய அளவுடைய தாயிருந்தது. மையத்தின் ஆழம் முதலில் உள்பக்கத்தின் அளவினதாக இருந்தாலும் உயரத்திலிருந்த தளம் விரிந்து கீழே கவிந்திருந்தமையால் அது கோட்டைக் காப்பாளர்களுக்கு எத்தகைய இடர்க்கும் ஏற்ற பாதுகாப்பு இடமாக அமைந்திருந்தது. ஆனால் முற்றுகையின் இறுதியில் நாங்கள் வெடித்த குண்டுகளும் வெடிமருந்துக்கலன்களும் திட்டமிட்ட தாக்குதல் என்பதைவிட தற்செயலான தாக்குதல் என்றே கூறலாம். இவைகள் அனைத்தும் வெளிப்புறத்திலிருந்து செய்யப்பட்ட தாக்குதல்கள். என்றாலும் இதைத் தவிர வேறெதுவும் எங்களுக்கு வெற்றியைப் பெற்றுத் தந்திருக்க இயலாது. ஏனெனில் உண்மையில் பிளவைக் காத்து நின்ற ஒவ்வொரு வீரனும் கொல்லப்பட்டான். எங்கள் துப்பாக்கிப் படையினரைத் தடுத்து அடைந்திருந்த வழி திறந்து கோட்டையில் நுழைய வாய்ப்பு ஏற்பட்டது. அத்தகைய பாதுகாப்பான பதுக்கிடங்களிலிருந்து எறியப்பட்ட நீண்ட ஈட்டிகள் மிக்க வலிமையுடையதாயிருந்தது. உச்சியை அடைந்த ஒவ்வொரு மனிதனும் ஈட்டியால் குத்தப்பட்டு வீழ்த்தப்பட்டதில் வியப்பே இல்லை. ஏனெனில் அவனால் எதிரியைக் குறிவைக்கவும் இயலாது. எங்கிருந்து அத்தாக்குதல் வருகிறதென்பதையும் அவனால் கூற இயலாது. இந்தக் காட்டுத்தனமானவர்கள் கையாண்ட பாதுகாப்பு முறை எந்த ஒரு பொறி வல்லுனனுக்கும் புகழைத் தேடித் தந்திருக்கும். (! - ந.ச.) அவர்களது சலிப்பில்லாத விடா முயற்சியைத் தவிர அவர்களுக்கு வேறெதுவும் வெற்றியைத் தந்திருக்க முடியாது. (வேறெது அவர்கட்குச் சொத்து? - ந.ச.) கொத்தளங்கள் பலம் வாய்ந்திருந்தாலோ அல்லது அவர்களது போர்க்கருவிகளான சிறு துப்பாக்கிகளும், துப்பாக்கியின் கூர் ஈட்டிகளும் வலிமை வாய்ந்திருந்தாலோ இந்த இரண்டு மாத மானக்கேடான போர் நடந்திருக்க முடியாது. (ஒப்புக் கொள்கிறாயா? ஒண்ட வந்தவனே! - ந.ச.) எங்கள் குதிரைப்படை இன்னும் வலிமையுடையதாயிருந்திருந்தால் இந்த ஆறு மாதங்களாகப் போர் நீண்டு தொடர்ந்து வளர்ந்திருக்க முடியாது. (என்ன ஆசை! ஆணவம்! - ந.ச.) தப்பியோடிய வீரர் கூட்டம் சிறுவயல் வரை வெற்றிகரமாய்ச் சென்று அங்கு மருதிருவரின் இரண்டாயிரம் வீரர்களுடன் சேர்ந்து கொண்டனர். சிறுவயல் எங்குளது? மருதிருவர் யார்? என்பதைப் பிற்சேர்க்கையில் காண்க.

9வது பகுதியைச் சேர்ந்த மூன்று படைப் பிரிவுகள் காப்டன் ஹசார்ட் (Captain Hazard) தலைமையில், எந்த வகையிலும் பொறாமைப்பட இயலாத பணியாகிய கோட்டை முற்றுகையில் ஈடுபட்டிருந்த முன்னோடிகளுடன் விடப்பட்ட காரணத்தால், மே 25 ஆம் தேதி 16வது பகுதியைச் சேர்ந்த படையின் காப்டன் எம்டொனல்