பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/369

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

361 கால்டுவெல்

வர்கள்இன்று நிலவரக் குத்தகைப் பெற வந்தனர். - மருதுகள் தங்களுடைய படைகளைக் கலைத்துவிட்டனர் என்றும் சுமார் இருநூறு ஆட்களுடன் சங்கரபதி காட்டுக்குச் சென்று மறைந்திருப்பதாய் அவர்கள் தெரிவித்தனர். இச்செய்தியை நாங்கள் நற்செய்தியாகவே கருதினோம்

ஏனெனில் அத்தகைய கடினமான நன்மையற்ற போர்கள் செய்வதில் அவ்வளவு அலுப்படைந்திருந்தோம் . பின்னர் நடந்தவை யாவும் முக்கியமற்றவை. எதிரிகள் மறைந்து வாழ்ந்தனர். எங்கள் குழுக்கள் பல்வேறு காடுகளிலும் எதிரிகளைத் தேடும்படி அனுப்பப்பட்டன.

சிறிது நாட்களுக்குள் மருதுக்கள் அவர்களுடைய குடும்பத்தினர் கட்ட பொம்ம நாயக்கன், தளவாய்ப்பிள்ளை, ஊமைத்துரை முதலியவர்கள் பிடிக்கப்பட்டுத் தூக்கிலிடப்பட்டனர்.

இவர்களுக்குள் சின்னமருதுவின் இளைய மகனானதுரைசாமியும், குறைவான குற்றச்சாட்டுகளுடைய தளவாய்ப்பிள்ளை இருவரும் ஆயுள் தண்டனை கொடுக்கப்பட்டு எழுபது உண்மையுள்ள ஊழியர் துணையுடன் பிரின்ஸ் ஆப் வேல்ஸ் (இதுதான்பினாங்குத் தீவு!-- தீவுக்கு அனுப்பப்பட்டனர்

தொல்லைகள் நிரம்பிய இந்தப் போர் இவ்வாறாக முடிந்த அதில் உயிர் இழப்பு அதிகம். எனினும் இறுதியில் கிடைத்த வெற்றி உயிரோடு மீண்டவர்களுக்குப் பெருமையைத் தந்தது.

இப்படையெடுப்பின் முடிவைப் பற்றிப் பேசும்போது ஜெனரல் வெல்ஷ் அது சிறுமைக்குரியது எனக் குறிப்பிட்டுள்ளார். இவர் இராணுவத் திறனாய்வாளர் நோக்கிலிருந்து அதைப் பற்றிச்சிந்திப்பதால் அப்படிக் கூறியுள்ளார்.

நாகரிகமற்ற அத்தகைய ஓர் எதிரியை வீழ்த்த எடுத்துக் கொண்ட அவ்வளவு காலம், உயிர் பொருள் முதலியவற்றின் இழப்பால் ஆங்கிலப் படை பெருமை பெறவில்லை என்றே அவர் கூறுகிறார். உள்ளூர் மக்கள், அவர்களது பரம்பரை அரசு இவற்றின் கண்ணோட்டத்தில் பார்க்கும் போது போரின் பயன்கள் மனநிறைவுடையதாக இருந்தன.

(ஆம்! எதிரியின் இலாபம் சிறிது இழந்தவன் இழப்போ பெரிது! என்ன இருந்தாலும் கால்டுவெல் வெறும் கத்தி எடுப்பவர் இல்லையே! புத்தி உடையவரும், அல்லவா? - நன்று. - ந.ச.)