பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/370

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருநெல்வேலி சரித்திரம் 362

 இத்தகைய போர்களில் இந்தப் பாளையக்காரப் போரே தனிச்சிறப் புடையதாகி விட்டது.

ஏற்கனவே குறிப்பிட்டபடி மருதுக்களின் நாட்டு எல்லையிலுள்ள ஊரும் கோட்டையுமாகிய திருப்பத்தூரிலுள்ள உயர்ந்த கோட்டையின் மீது மருதுக்கள் தூக்கிலிடப்பட்டனர்.

அந்த மணல்மேடு இன்னும் காணப்படுகிறது. படைத் தலைவன் அக்னியூ சிவகங்கையில் ஒரு படையை நிறுத்தி விட்டுப் பாளையங் கோட்டைக்குத் திரும்பினான். காப்டன் வெல்ஷ் பிரிந்து தூத்துக்குடிக்கு அனுப்பப்பட்டார். அங்கு நாடு கடத்தப்பட்ட எதிரிகள் எழுபது பேர்களையும் கப்ப லேற்றும் வேலையை மேற்பார்வையிட்டார்.

அந்தக் குற்றவாளிகளில் சின்னமருதுவின் இளைய மகனும் ஒருவன். வெல்ஷ் தன் நாட்டின் கடமைக்குச் சிறிதும் குறை நேரா வகையில் அச்சிறுவனை மிக அன்புடன் நடத்தினார். (அடே! - ந.ச.)

எட்டு ஆண்டுகட்குப் பின்னர் பினாங்கு சிறையில் பழைய கைதியை வெல்ஷ் சந்தித்தான் என்று குறிப்பிடுவது வியப்புக்குரியது.

பாஞ்சாலங்குறிச்சிக்கோட்டை அழிக்கப்பட்டதன்றி அந்த இடம் தரைமட்டமாகவும் ஆக்கப்பட்டது.

மக்கள் மனதிலே கடுமையையும் கொடுமையையும் நிலை நிறுத்த அந்த இடத்தை உழுது பயிரிடச் செய்தனர். அன்றியும் எல்லா நாட்டுப் படங்களிலிருந்தும் கணக்குகளிலிருந்தும் பாஞ்சாலங்குறிச்சி என்ற பெயரையே அகற்றி விடுமாறு கட்டளையிடப்பட்டது. (அப்போ?! - ந.ச.) - - அவ்வாறிருந்தும் பின்னர் ஆர்டன்சு நாட்டுப் படத்தில் இந்த இடம் சிதைந்த பாஞ்சாலங்குறிச்சி என்று குறிக்கப்பட்டுள்ளது.

ஆனால் பாளையக்காரனும் அவன் உடன் பிறந்தானுமாகிய ஊமைத்துரையும் தூக்கிலிடப்பட்ட பீரங்கிக் கோட்டை மேட்டின் சில அறிகுறிகளும், அதனருகே கடந்த இரண்டு போர்களில் உயிர் துறந்த உயர் அதிகாரிகள், படையினர், கல்லறைகளுடைய அடைப்புமனையும் தவிர அந்த இடத்தைக் குறிக்க இன்று அங்கு வேறு எந்தத் தடையமு மில்லை. முதல் தாக்குதலில் இறந்தவர்களின் உடல்கள் ஒட்டப் பிடாரத்திற்கு வெளியே அருகிலேயே இருக்கின்றன. (ஆங்கிலேயன் அழித்த