பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/399

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

389 கால்டுவெல்


விட, பிராட்டஸ்டண்டுகளும் பெஸ்கியின் தொண்டுகளில் ஈடுபாடு கொண்டிருந்தனர். 1840 ஆம் ஆண்டிற்கான சென்னை இலக்கிய ஏட்டில் தமிழிலும் இலத்தீனிலும் கவிதையாகவும் உரைநடையாகவும் பெஸ் கியினுடைய எண்ணற்ற எழுத்தோவியங்கள் பற்றிய பட்டியல்கள் காணப் படுகின்றன. தமிழ் இலக்கிய உலகில் அவர் அடைந்திருந்த பேற்றினைப் பற்றிய கீழ்க்காணும் குறிப்பு 'திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்' என்ற நூலின் முன்னுரையிலிருந்து எடுக்கப்பட்டது.

18ஆம் நூற்றாண்டின்தொடக்கத்தில் அவர்கள் வளர்ச்சியுற்றிருந்த காலத்தில் மட்டுமன்றி தற்காலம் முழுவதிலும் ஒரே காலத்தில் வாழ்ந்த இரு புலவர்களுக்கு விருதுகள் வழங்கப்படல் வேண்டும். ஒருவர் உள் நாட்டுப் புலவர். மற்றவர் அயல்நாட்டுப் புலவர். இரண்டாமவர் இலக் கிய உலகில் இன்றும் உயர் இடத்தைப் பெற்றுள்ள புகழ்பெற்ற பெஸ்கி மற்ற தமிழ்ப் புலவர் போன்று இவர் தமிழரல்ல; ஓர் இத்தாலியர். ஏசு சங் கத்தைச் சார்ந்த சமயத்தைப் பரப்புகின்ற மதகுரு. இவர் தமிழில் புலமைமிக்கவர். சிறப்பாக இலக்கிய மொழி ஆராய்ச்சியில் வல்லவர். அந்த அளவுக்கு வேறு எந்த இந்திய மொழிகளிலும் வேறெந்த ஒரு ஐரோப்பியரும் திறமை பெற்றிருக்கவில்லை. அவருடைய உரைநடை நூல்கள் கொச்சை மொழியாலமைந்தது. சிறப்புடையது எனினும் ஈடு எடுப்பற்ற முதன்மையான மேம்பாடுடையதன்று. ஆனால் அவருடைய இலக்கிய மொழியில் இயற்றப்பட்ட பாடல்கள் இந்துக்களின் உயர்ந்த கருத்துக்களைக் கூறும் நோக்கில் கண்டால் அவை மிகச்சிறந்தவையே. அதிலும் சிறப்பாக அவருடைய புகழ் பெற்ற காவியம் தேம்பாவணி - சமயச் சார்புடைய உயர்ந்த தொடர் காவியம். அது சிந்தா மணியின் அமைப்பை ஒத்தது. அதாவது அது பரந்த உண்மைகளைக் கொண்டது. சிறப்பாக அணி செய்யப்பட்டது. மாறாக ஒருமைப் பண்புடையது. எனவே இரண்டாம் வகை தமிழ்க் கவிஞர்களில் முதன்மை இடத்தை அடையும் பேற்றினை விருப்பு வெறுப்பற்ற தமிழ்நாட்டுக் கவிஞர்களின் விருப்பத்தின் பேரிலேயே அடையலாம் என்பதில் எனக்கொன்றும் ஐயமில்லை. குறள், சிந்தாமணி, இராமாயணம், நாலடியார் இவற்றுள் மூன்று அதிகப்படியானால் நான்கு காவியங்கள் மட்டும் முதலிடத்தைப் பெற்றிருக்கின்றன என்பதை நினைவுக்குக் கொண்டு வரும் போது அத்தகைய மதிப்பு வாய்ந்த பேரிடத்தை ஓர் அயல் நாட்டவர் பெற்றது மிக்க வியப்புக்குரியது என்றே நான் நினைக்கிறேன். தேம்பாவணி அரிய அரசியல் தகுதிகளைப் பெற்றிருப்பினும் வியக்கத் தக்க மொழி வளத்தை எடுத்துக்காட்டியபோதிலும் குறைப்பயனால் அது பழமையின் அதாவது பண்டைத் தமிழ் இலக்கியங்களின் வழக்கத்தையும் நடையையும் சார்ந்து இருத்தலாகிய குற்றம் உடையதாயிருந்தது.